
CHENNAI:
படம்: லட்சுமி காந்தன் கொலை வழக்கு
நடிப்பு: வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி, அருவி மதன், கவிதாபாரதி, சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: கே வி சபரீஷ்
இசை: தர்புகா சிவா
ஒளிப்பதிவு : எம் வி பன்னீர்செல்வம்
இயக்கம்: தயாள் பத்மநாபன்
பிஆர்ஓ : ரேகா.
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ என்ற இப்படத்தின் கதை 1970-களின் பின்னணியில் கதை நகர்கிறது. இளைஞன் வெற்றி தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல், குடும்பக் கடன் மற்றும் வட்டிக்காரர்களின் நெருக்கடியால் சிறு திருட்டுகளில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறான். இந்த சூழலில் எதிர்பாராத ஒரு கொலை சம்பவத்தால் அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுகிறது. அந்த ஒரு நிகழ்வு அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, இறுதியில் தூக்கு தண்டனை வரை கொண்டு செல்கிறது.
கொலைக்குற்றவாளி ஒருவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டிய நிலையில், நீதிபதிக்கு என்னவோ உறுத்தல் ஏற்பட்டு, அவனுக்கு தீர்ப்பு எழுதிய நிலையில் வெற்றி எழுதிய தூக்குத் தண்டனைக் கைதியின் சுயசரிதை புத்தகம் ஒன்றை அவர் படிக்கிறார். அந்த புத்தகத்தை படிக்கும்போது ஒரு கொலை வழக்கை மட்டுமே சொல்லாமல், மரண தண்டனையின் நியாயம், சட்டத்தின் பார்வை, மனிதாபிமானத்தின் எல்லை ஆகியவற்றை விவாதிக்கும் வகையில் கதை இருக்கிறது. அதில் பொறுப்பில்லாத அப்பா , உழைத்துப் போராடும் அம்மா இவர்களுக்கு மகனாக பிறந்த வெற்றியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள், தன்னுடைய படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்கு காத்திருக்கிறான் வெற்றி. .
குடும்பத்தில் வறுமை.விவசாய நிலத்தின் பத்திரம் கந்துவட்டி ரெட்டியார் வீட்டில் இருக்கிறது. வட்டி கூட கொடுக்க முடியாத நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறான். ஒரு கட்டத்தில் வெற்றி பெரிய கடன் அடைக்க பெரிய திருட்டு செய்வது என்று இதுதான் கடைசி என்று இறங்கி தனது நிலம் அடமான பத்திரங்களைத் திருடுவதற்காக கடன் பட்டிருக்கும் கந்துவட்டி ரெட்டியார் கவிதா பாரதி வீட்டுக்குள் நுழைந்து திருடுகிறார். அங்கு கவிதா பாரதிக்கும், வெற்றிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவரைக் கொலை செய்து விடுகிறார். காவல் துறை வெற்றியை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்துகிறது. நீதிபதி கொலை செய்த காரணத்தால் வெற்றிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறார். தூக்குத் தண்டனையை மையமாக வைத்து மனிதநேயக் கோணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் உண்மையில் வெற்றி குற்றவாளியா? இல்லையா? என்பதுதான் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் மீதிக் கதை.
ஏற்கெனவே அவர் நடித்த படங்களை ஒப்பிடுகையில் வெற்றியின் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் பேசப்படும் அளவிற்கு இருக்கிறது. வழக்கமான தனது பாணியிலிருந்து மாறுபட்டு இயல்பாக நடித்துள்ளார்.
நாயகியாக பிரிகிடாசாகா நடித்திருக்கிறார்.கிராமத்துப் பெண் வேடத்துக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்ள மெனக்கெட்டிருக்கிறார்.அதற்கேற்
ரங்கராஜ் பாண்டேவுக்குப் பொருத்தமான வேடம்.வாதம் என்கிற பெயரில் பிடிவாதம் செய்கிற பாத்திரம், அவர் அதை .இயல்பாகச் செய்திருக்கிறார்.
கவிதா பாரதி வில்லத்தனமான தோற்றத்திலும் பேச்சிலும் ரெட்டியார் லட்சுமிகாந்தன் கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை கச்சிதமாக வழங்கியுள்ளார்.
மாறன்,லிஸி ஆண்டனி,சுப்பிரமணிய சிவா,கன்யா பாரதி,அருவி மதன் ஆகிய அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
பாரதிதாசனின் முத்தம் ஒண்ணு தாடா பாடலுக்கு மெட்டமைத்து இனிமையாக காதில் ஒலிக்க விட்ட இசையமைப்பாளர் தர்புக சிவா, பின்னணி இசை பல காட்சிகளில் உணர்வுகளை பல மடங்கு உயர்த்தி பிடித்து இருக்கிறார்.
எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய அனுபவ உழைப்பு மூலம் காட்சிகளுக்கு மெருகேற்றியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் தயாள் பத்மநாபன்.ஒரு மரண தண்டனை வழக்கை மையமாகக் கொண்டு மரணதண்டனைக்கு எதிரான கருத்தை விதைக்க முயன்றிருக்கிறார். தேவையற்ற வணிக சமரசங்கள் இல்லாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லும் விதத்தில் காட்சிகளை அமைத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. ஒரு தூக்குத் தண்டனை கைதியின் வாழ்க்கை என்ன என்பதை படம் முழுவதும் தனது கருத்தில் உறுதியாக நின்று, எந்த இடத்திலும் தடம் மாறாமல் கதையை நகர்த்தியிருப்பது அவரது இயக்கத்தின் பலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ மனித நேயத்தை யதார்த்தமாக சொல்லும் படம்.
ரேட்டிங் 3/5.