
CHENNAI:
படம்: ஐ நோபடி ( I Nobody )
நடிப்பு : ப்ரித்விராஜ் சுகுமாரன், பூ பார்வதி, அக்கீம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன்
தயாரிப்பு: சுப்ரியா மேனன்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு :
தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம்: நிசாம் பஷீர்
பிஆர்ஓ : யுவராஜ்.
வங்கி கொள்ளையர்கள் மூன்று பேர் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கிறார்கள். அந்த வங்கியில் கொள்ளை நடக்கும் நேரத்தில் அங்கே இருக்கிறார் நாயகன் பிருத்விராஜ். அவர் எதற்காக அங்கு சென்றார் என்ற காரணத்தை வெளியில் சொல்லமுடியாத நிலை.ஏற்படுகிறது. அதனால் கொள்ளை போன பணம் மொத்தமும் அவரிடம்தான் இருக்கிறது என காவல்துறை உட்பட எல்லோருக்கும் சந்தேகம் வருகிறது வங்கி கொள்ளையர்களால் கடத்தப்பட்ட அவர், சில நிமிடங்களில் விடுவிக்கப்பட்டாலும், கொள்ளையர்கள் விபத்தில் உயிரிழந்த பிறகு கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மாயமாகிறது. அந்தப் பணம் பிருத்திவி ராஜிடமே இருப்பதாக போலீஸாரும், பொதுமக்களும் நம்பத் தொடங்குகிறார்கள்.
இதனால் நாயகன் பிருதிவிராஜ் மற்றும் அவருடைய குடும்பமும் பெரும் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு போராடும் பிரித்விராஜின் செயல்கள் அதிக வேதனைகளை உருவாக்கி, தப்பிக்க முடியாத அளவுக்கு பெரும் சோதனைகள் ஏற்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். இறுதியில் அவர் நிரபராதியாக போலீஸ் கஸ்டடியில் இருந்து மீண்டு வந்தாரா? கோடிக்கணக்கான பணம் கிடைத்ததா? என்பதுதான் ” ஐ நோபடி ” படத்தின் மீதிக் கதை.
பிருத்விராஜ் சுகுமாரன், ராஜீவன் கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்திருக்கிறார். குற்றமற்ற ஒருவன் மீது விழும் சந்தேகத்தின் பாரத்தை தனது முகபாவனைகள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
நாயகனின் மனைவியாக ‘பூ’ படப்புகழ் பார்வதி நடித்துள்ளார்.கணவனிடம் அந்நியோன்யம் இல்லாத நிலையிலும் பிள்ளைகளுக்காக எதிர்வாதம் செய்யாமல் எதையும் பேசாமல் மௌனமாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழும் ஒரு குடும்பத் தலைவியாக அவர் வாழ்ந்திருக்கிறார்.
காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகான்,ஜேக்கப் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன்,முதலமைச்சராக நடித்திருக்கும் விஜயராகவன்,காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன்,வங்கிக்கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால்,பிரித்விராஜின் மூத்தமகளாக நடித்திருக்கும் ஜியா ஆகிய அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தின் பதற்றமான சூழலை அழகாக பதிவு செய்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஒவ்வொரு சஸ்பென்ஸ் தருணத்தையும் இன்னும் வலுவாக்கி இருக்கிறது.
சமீர் அப்துல் எழுத்தின் வீரியம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நிசாம்பசீர். இயக்குநரின் திரைக்கதை அமைப்பும், காட்சிகளை வடிவமைத்த விதமும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக, கதையின் மைய மர்மத்தை இறுதிவரை தக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் ‘ஐ : நோபடி’ ஒரு திருப்தியான சஸ்பென்ஸ் திரில்லர் படம்.
ரேட்டிங் 3/5