சிக்மா — திரை விமர்சனம் 

9

 

 ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில்
வெளியான சிக்மா
படத்தின் விமர்சனம்
நாயகன் சந்தீப் கடன் சுமையில் இருக்கும் ஒரு நூலக உரிமையாளர், போதைப்பொருள் கும்பல், சட்டவிரோத சூதாட்ட மையம், கோடிக்கணக்கான பணம் இருக்கும் ரகசிய லாக்கர், அதைத் திறப்பதற்கான சாவி, பென்டிரைவ் எனப் பல அம்சங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது
அந்த எதிர் பார்ப்பை படம் நிறைவேற்றியதா
இல்லையா?
,குரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன், தனது தாயின் நினைவாக இயங்கிவரும் நூலகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்.
குரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன், தனது தாயின் நினைவாக இயங்கிவரும் நூலகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார். குடும்பக் கடனை அடைக்க வேண்டிய சூழலில் சிக்கியுள்ள அவர், அதிகளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு சட்டவிரோத சூதாட்ட மையம் மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது.
சூதாட்ட மையத்தில் போதைப்பொருள் விநியோகம் தொடர்பான காட்சிகள் அடங்கிய பென்டிரைவ் குருவிடம் கிடைக்கிறது. அதே பென்டிரைவுடன் ரூ.1,000 கோடி மதிப்பிலான ரகசிய லாக்கரின் சாவியும் தொடர்புபடுகிறது. அந்தச் சாவியை மீட்க வில்லன் கும்பல் முயற்சிக்கிறது. இதைச் சுற்றியே கொள்ளைத் திட்டம், துரோகம், பழிவாங்கல் உள்ளிட்ட பல கதைக்கோடுகள் நகர்கின்றன. இந்தப்படத்தில் ஹெய்ஸ்ட், போதைப்பொருள், சூதாட்டம், இரட்டைத் துரோகம் என இந்த வகை திரைப்படங்களில் வழக்கமாகக் காணப்படும் பல அம்சங்கள் இருந்தாலும், அவற்றை வலுவாக இணைத்துள்ளார்
 படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு படத்தின் வேகத்தையும் தோற்றத்தையும் ஓரளவு தக்கவைக்கிறது.
 கோடிக்கணக்கான பணம் இருக்கும் லாக்கரைச் சுற்றி கதை நகர்ந்தாலும், அதை எப்படிக் கொள்ளையடிப்பது என்பது குறித்து நாயகனும் அவரது நண்பர்களும் தீவிரமாகத் திட்டமிடும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது
  அறிமுக இயக்குநராக ஜேசன் சஞ்சய் பல கதாபாத்திரங்களையும் பல்வேறு கதைக்கோடுகளையும் ஒரே திரைப்படத்தில் இணைக்க முயன்றிருக்கிறார். ஆனால், புதுமையான அணுகுமுறையை எதிர்பார்க்க வைக்கிறது திரைப்படத்தின் முதல் பாதியில் கதை அமைக்கப்பட்ட விதத்தையும், பின்னர் எழும் கேள்விகளுக்கான சில காட்சிகள் எழுதி இருக்கிறார்.
ஜேசன் சஞ்சய் படத்தின் அளவையும் பிரம்மாண்டத்தையும் சரியாகக் கையாண்டிருக்கிறார்.
சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா எப்படி?
ஃபரியா அப்துல்லா ரேடியோ தொகுப்பாளராக நடித்துள்ளார்.
குரு கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடனை அடைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் பின்னர் வில்லனை மிரட்டி பணம் பெற முயற்சிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு படத்தைத் தாங்குகிறார்.
ஆனால் நாயகனின் பிரச்னைகள், காதல், நூலகத்துடனான உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆகியவற்றுடன் பார்வையாளர்கள் போதுமான அளவு ஒன்றிப்போக செய்கிறார்.
ஃபரியா அப்துல்லா . அவருக்கு துடிப்பான கதாபாத்திரம் இருந்தாலும், கதையின் முக்கியப் பகுதிகளில் அவருக்கான வலுவான தருணங்கள் குறைவாக இருக்கிறது
ஆக்‌ஷன், தொழில்நுட்ப அம்சங்கள் எப்படி?
ஆக்‌ஷன் காட்சிகள்.
பல அடுக்குகளைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியைப் படத்தின் குறிப்பிடத்தக்க ஆக்‌ஷன் காட்சிகளில் ஒன்றாகச் இருக்கிறது
தானியங்கி கார் நிறுத்துமிட சண்டை உள்ளிட்ட சில காட்சிகளில் சுவாரசியமான இருக்கிறது. படத்தின் தயாரிப்பு, டிரோன் காட்சிகள் உள்ளிட்ட பிரமாண்டமான காட்சியமைப்புகள் ரசிக்க வைக்கிறது.
இசை, ஒளிப்பதிவு மற்றும் சண்டைக் காட்சிகளில் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது..
மொத்தத்தில் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்.

 

ரேட்டிங் 3/5