
இலங்கைத் தமிழர்களின் வலி, தந்தை–மகள் பாசம், அகதியாகும் வேதனை, புதிய மண்ணில் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படம். தாய் நிலம் “
கதை என்ன?இலங்கையில் நடைபெற்ற போர்ச்சூழலில் தங்களுடைய சொந்த மண்ணையும் உறவுகளையும் இழக்கும் நாயகன் சேதுராமன் ,
அவரது மகள்
தமிழினி,வேறு வழியின்றி தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்.
அவர்கள் கையில் பெரிய சொத்தோ, பாதுகாப்பான எதிர்காலமோ இல்லை. புதிய இடத்தில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம்.
தந்தையின் ஒரே லட்சியம் — தன் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
அவர் தனது மனைவி அபிநயா வின், உறவினர் வீட்டுக்கு மகளை அழைத்து செல்கிறார் .அங்கு அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள்.
வேறு வழியின்றி
தென்காசி அருகே
டீ கடை வைத்து இருக்கும் பாலா சிங்”மற்றும் அவரது ஆட்டோ ஓட்டும் நண்பர்கள் ஆதரவால், ஒரு பஸ் நிழல் குடையின் கீழ் தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நாயகன் கனவு
மகளை படிக்க வைக்க வேண்டும் .
தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும்.
வயிற்று பசி தீர வருமானம் வேண்டும். இதுதான் லட்சியம்
அந்த லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே கதை களம்.
நாயகன் சேது ராமன் சந்திக்கும் பொருளாதாரச் சிரமங்கள், புதிய மனிதர்களின் அணுகுமுறை, அதிகார அமைப்புகளின் எதிர்கொள்ளல், அதே நேரத்தில் கிடைக்கும் மனிதநேய உதவிகள் ஆகியவற்றை கதை பதிவு செய்கிறது.
முக்கியமாக, புதிய மண்ணில் வாழ்க்கை கிடைத்தாலும் பிறந்த மண்ணின் நினைவு மனதை விட்டு நீங்குவதில்லை என்பதுதான் படத்தின் உணர்ச்சிமிக்க மையம்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் “அகதி” என்ற வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் ஒரு தந்தையின் மனதையும், மகளுக்காக அவர் செய்யும் தியாகத்தையும் காட்டுவதுதான். தாய்நிலத்தை இழந்தாலும் மகளின் எதிர்காலத்தை இழக்கக்கூடாது என்று தன் உயிரை கொடுக்கும் காட்சி நெகிழ்வான காட்சி.கிளைமேக்ஸ் சூப்பர்.
படத்தின் முக்கிய விஷேசங்கள்அபிலாஷ் ஜி.தேவனின் இயக்குநர் அறிமுகப் படம். இவர் இயக்குநர் I.V. Sasiயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தக் கதையை தந்தை–மகள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார்.
போரின் அரசியலை மட்டும் சொல்லாமல், போரால் ஒரு சாதாரண குடும்பத்தின் வாழ்க்கை எப்படி சிதைகிறது என்பதையே முன்னிலைப்படுத்துகிறார். அதனால்தான் படம் உணர்வுபூர்வமாக இருக்கிறது .போர்க்காட்சிகளுக்கு மத்தியில் குழந்தையின் பார்வையை வைத்திருப்பது படத்தின் மிகப்பெரிய திரைக்கதை பலம். தமிழனின் வலியை” புரிந்து படம் எடுத்திருப்பது சிறப்பு .அவருக்கு ஒரு பூங்கொத்து ![💥]()

நடிகர் & நடிகைகள்
நாயகன் அமர் ராமச்சந்திரன்
தாய்நாட்டை விட்டு மகளுடன் வெளியேறும் தருணம் – தன்னுடைய வாழ்க்கையைவிட மகளின் எதிர்காலமே முக்கியம் என்ற தந்தையின் மனநிலையை அமர் வெளிப்படுத்தும் பகுதி.
அகதியாக புதிய வாழ்க்கையை எதிர்கொள்ளும் காட்சிகள் – சொந்த மண்ணை இழந்த மனிதனின் மனவேதனையும், புதிய இடத்தில் வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தையும் அவர் அமைதியான நடிப்பில் காட்டுகிறார்.
மகளுக்காக– தந்தையாக அவரது அன்பும், பொறுப்புணர்வும் வெளிப்படும் முக்கியமான காட்சிகள்.
தாய்நாட்டின் நினைவுகளால் உடைந்து போகும் காட்சிகள் – அருமையாக இருக்கிறது. மண்ணை இழந்த மனிதனின் ஏக்கம் அமரின் முகபாவனையில் வெளிப்படுகிறது.
மகளுடன் வரும் உணர்ச்சிகரமான இறுதிப் பகுதிகள் – , “என் மகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும்” என்ற தந்தையின் போராட்டமாக மாறுகிறது. அமரும் நேஹாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படத்தின் உணர்ச்சி பலமாக அமைகின்றன
அமைதியான, பாசமான தந்தையாக சிறப்பாக நடித்துள்ளார்
மகளின் எதிர்காலத்திற்காக ஓட்டலில் சென்று வேலை கேட்பது, பிறகு மனைவியின் நினைவாக வைத்திருந்த, தங்கக்காப்பு அடகு வைத்து தள்ளுவண்டி வாங்கி காய்கறி விற்பது, என படம் முழுக்க பாசம் பொங்க நடித்திருக்கிறார்.
அமர் ராமச்சந்திரனின் நடிப்பின் சிறப்பு என்னவென்றால், அதிகமான வசனங்களைவிட மௌனம், முகபாவனை, மகளைப் பார்க்கும் பார்வை மூலமாகவே கதாபாத்திரத்தின் வலியை வெளிப்படுத்துகிறார். அதுதான் இந்தப் படத்தில் அவரது நடிப்பை தனித்துவமாக்குகிறது.

‘ படத்தின் நாயகன் டாக்டர் அமர் ராமச்சந்திரனின் சொந்த மகள் நேஹா அமர் தான் அவருக்கு மகளாக நடித்திருக்கிறார். படம் தந்தை–மகள் பாசத்தை மையமாகக் கொண்டது. தத்ரூபமாக இருக்கிறது.
நேஹா அமரின் நடிப்பு எப்படி?நேஹா நடித்திருப்பது இந்தப் படத்தின் முக்கியமான பலம் என்று சொல்லலாம்
கதையில் அவர் வெறும் குழந்தை நட்சத்திரமாக இல்லாமல், போரின் காரணமாக தாய்நாட்டை விட்டு தந்தையுடன் அகதியாக வரும் சிறுமி என்ற பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
குறிப்பாக அப்பாவை நம்பி நிற்கும் குழந்தையின் அப்பாவித்தனம், புதிய சூழலை எதிர்கொள்ளும் பயம், ஏக்கம் போன்ற உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
அவருடைய தந்தை அமர் ராமச்சந்திரனே படத்தின் நாயகனாக இருப்பதால், இருவருக்கும் இடையிலான தந்தை–மகள் பாசக் காட்சிகள் செயற்கையாகத் தெரியாமல் இயல்பாக அமைந்திருக்கின்றன.
படத்தின் உணர்ச்சிப் பகுதிகளில் அதிகப்படியான ‘சினிமாத்தனமான’ நடிப்பைத் தவிர்த்து, குழந்தைக்கே உரிய இயல்பான முகபாவனைகள் கொடுத்திருப்பது சிறப்பு.
நேஹாவின் நடிப்பு “ படத்தின் உணர்ச்சியை பார்வையாளரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறது. குறிப்பாக அமர் ராமச்சந்திரனுடன் வரும் காட்சிகள்தான் படத்தின் மனதைத் தொடும் பகுதிகள். — அமர் ராமச்சந்திரன் படத்தை தயாரித்தும் நடித்தும் இருக்கிறார்;
அவருடைய 10 வயது மகள் நேஹாவையே மகளாக நடிக்க வைத்துள்ளார்
தந்தை–மகள் பாசம் வெளிப்படும் உச்சக்கட்ட தருணங்கள் – படத்தின் உணர்ச்சி சுமையை தாங்கிச் செல்லும் காட்சிகள் இவை. அமர் ராமச்சந்திரனுடன் நேஹாவுக்கு இருக்கும் இயல்பான தந்தை–மகள் உறவு திரையில் நன்றாகப் பிரதிபலிக்கிறது.
முக்கியமாக நேஹாவின் சிறப்பு பெரிய பெரிய வசனங்களில் இல்லை; கண்கள், முகபாவனை, பயம், ஏக்கம், அப்பாவிடம் காட்டும் நம்பிக்கை ஆகியவற்றில்தான். அதனால்தான் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது
படத்தின் மிகப்பெரிய பலம். குழந்தையின் குழப்பம், ஏக்கம், தாயைத் தேடும் பிடிவாதம், இறுதியில் வரும் உணர்ச்சிப் போராட்டம் என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய நடிப்புக்காக தேசிய விருது கொடுக்கலாம்
மனநிலையும் மிக அழகாக வெளிப்படுகிறது.
மற்றும்…
பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ரேட்டிங் 3/5