குலசாமி

171

 

மிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷரவண சக்தி இயக்கியுள்ள குலசாமி படம் திரைக்கு வந்துள்ளது.

நடிகர் விமல், தன்யா ஹோப் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது காண்போம்.
மதுரையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் விமல், தினமும் மதியம் 1 மணிக்கு மருத்துவக் கல்லூரி செல்கிறார். அங்கு பேராசிரியை ஒருவர் நைசாக பேசி ஒரு மாணவியைப் பணக்காரர் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார். இது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்க அதனை ஆதாரமாக சேகரித்து ஒரு பெண் தனது தோழியான தான்யா ஹோப்பின் மொபைலுக்கு அனுப்பி விட, அவரை காப்பாற்றுகிறார் விமல். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
பாலியல் குற்றங்களைப் முதன்மையாக வைத்துக்கொண்டு அதற்கு எதிராக எந்த அழுத்தமான வசனமும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றம்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யாவை விட விமல் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருந்தது. பேராசிரியையாக வினோதினி, வில்லனாக ஜனனி பாலு, போலீஸாக நடித்துள்ள முத்துப்பாண்டி ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மகாலிங்கம் இசையில் பாடல்கள், பின்னணி இசை நன்றாக உள்ளது.
80களில் வெளியாகியிருந்தால் கூட இந்த படத்தை பழமையான படம் என்றே கூறியிருப்பார்கள். நிர்மலாதேவி, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை இணைத்து படத்தின் கதையை எழுதியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் பெரிய தவறு செய்துவிட்டார்.
கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
விமலின் நடிப்பு பிரமாதம்
கிளைமாக்ஸ் காட்சியில் விமல் செய்திருக்கும் காரியம் மிக நன்றாக உள்ளது.
தவறு செய்தவர்களை கொடுக்கும் தண்டனை காட்சிகள் மிக அற்புதம் கிளைமேக்ஸ்.
மொத்தத்தில் அண்ணன் தங்கை பாசம் தான் குலசாமி.