சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடும்

158

 

 

 

Jessica Drew (Issa Rae), Gwen Stacy (Hailee Steinfeld), Peter B. Parker (Jake Johnson) and his daughter Mayday in Columbia Pictures and Sony Pictures Animations’ SPIDER-MAN™: ACROSS THE SPIDER-VERSE.
Miguel O’Hara as Spider-Man 2099 (Oscar Isaac) in Columbia Pictures and Sony Pictures Animation’s SPIDER-MAN: ACROSS THE SPIDER-VERSE.
ஸ்பைடர்-வெர்ஸ் என்பது மாற்று பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களால் பகிரப்படும் பல அண்டங்களாகும். இதுவே, கதை நிகழும் களமாகும். இப்படம், 2018 இல் வந்த ‘ஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் கணினி அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர். கணினியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களை (CGI) ஸ்டாப்-மோஷன் அனிமேஷனாக எடுக்கப்பட்ட முதல் ஸ்பைடர்-மேன் தொடர் இதுவே! இப்படம், மூன்று பாகங்கள் கொண்ட அத்தொடரின் 2 ஆவது படமாக வெளியாகியுள்ளது.
பக்கத்து வீட்டுப் பையன் போலிருக்கும், ப்ரூக்ளினின் முழு நேர ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸ், க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பின், மல்டிவெர்ஸில் சிக்கி, பல அண்டங்களில் இருந்து ஒன்றிணைந்த ஸ்பைடர் சொசைட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த சொசைட்டியில் உள்ள ஸ்பைடர்-மக்கள், பிரபஞ்சங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், புதிதாய் முளைக்கும் அச்சுறுத்தலை எப்படிக் கையாள்வதென, ஸ்பைடர்-மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மைல்ஸ் மொரால்ஸ், ஸ்பைடர்-மேனாக இருப்பது என்றால் என்ன என்று உறுதியாகத் தீர்மானிப்பதோடு, உலகையும், தன் குடும்பத்தையும், இரண்டையும் காப்பாற்ற முடியும் என நம்பிக்கை கொள்கிறார். ஸ்பைடர் முகமூடியை யார் வேண்டுமானாலும் அணியலாம், ஆனால் ஒருவரது செயற்பாடுகளே அவரை நாயகன் ஆக்குகிறது.
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் – Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson
திரைக்கதை – Phil Lord & Christopher Miller & David Callaham, based on Marvel Comics.
பின்னணிக் குரல்- Shameik Moore (voice of Spider-Man), Hailee Steinfeld (Gwen Stacey), Brian Tyree Henry, Luna Lauren Velez, Jake Johnson, Jason Schwartzman, Issa Rae, Karan Soni, with Daniel Kaluuya and Oscar Isaac.
VFX – Michael Lasker ; Character Animation -Alan Hawkins
கலை இயக்கம் – Dean Gordon
*_ஜூன் 1, 2023 அன்று 10 மொழிகளில் வெளியிடுகிறது “சோனி பிக்சர்ஸ்”._*