Successfully running : Thalainagaram 2 Review

173

 

இயக்குனர் விஇசட் துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தலைநகரம் 2. இந்த படத்தில்  சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா சி, பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ரைட் ஐ தியேட்டர்ஸ், அருந்தவம் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன்  வெளியாகி இருக்கும் தலைநகரம் 2 படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

 

சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைநகரம் 2. இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி நடித்த அதே ரைட் கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் வடசென்னையின் மிகப்பெரிய ரவுடியாக ரைட் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அதை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார் சுந்தர் சி.

 

பின் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று பகுதிகளிலும் பிரபலமான
ரவுடியாக இருக்கும் மூவருக்கும் முன்னாள் ரவுடியான சுந்தர் சிக்கும் இடையே பிரச்சனை ரவுடியான அந்த பிரச்சினையை முடிக்க அவர் மீண்டும் ரவுடியாக மாறுகிறார். கடைசியில் சுந்தர் சி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை. படம் முழுவதுமே சுந்தர் சி சண்டைக் காட்சிகளுடன் இருக்கிறார். அவரின் சண்டை காட்சிகளில் ஒவ்வொரு அடியும் இடிபோல இறங்குகிறது என்று சொல்லலாம்.

 

மேலும், படத்தில் மூன்று வில்லன்களையும் தனித்தனியாக சுந்தர் சி வைத்து செய்கிறார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் படம் முழுவதும் சுந்தர் சி தாங்கி செல்கிறார். ஆனால், சுந்தர் பாகுபலி பிரபாகர் மட்டும்தான் தெரிந்த முகம்.  மற்ற வில்லன்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர் கதைக் கேட்ப மிக கச்சிதமாக நடித்துள்ளனர்.

 

 படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வானியை நடித்திருக்கிறார்  கவர்ச்சியாக இளசுகளை மனசுக்குள் அல்லும் அளவிற்கு அழகாக நடித்துள்ளார்.

 

படத்திற்கு பின்னணி இசை பக்க பலமாக அமைந்துள்ளது . இசை நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் திரைப்படம் ஆக்சன் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது அனைவரும் பார்க்கக் கூடிய படம்.

 

Rating:3/5