“எனக்கு ENDயே கிடையாது” திரைவிமர்சனம்!

159

 

நடிகர் & நடிகைகள் :- விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்ரம் ரமேஷ்.

ஒளிப்பதிவு :- தளபதி ரத்தினம்.

படத்தொகுப்பு :- முகன்வேல்.

இசையமைப்பாளர் :- கலாசரண்.

தயாரிப்பு நிறுவனம்:- ஹங்கிரி ஒல்ப் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- கார்த்திக் வெங்கட்ராமன்.

கால் டாக்ஸி ஓட்டுனரான கதாநாயகன் விக்ரம் ரமேஷ், கதாநாயகி ஸ்வயம் சித்தாவை கால் டாக்ஸியில் ஏற்றுக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் அவருடைய வீட்டில் இறக்கி விடும் போது, கதாநாயகி ஸ்வயம் சித்தா மது விருந்துக்கு அழைக்க முன்பின் தெரியாத அவருடன் உட்கார்ந்து மது அருந்தி விட்டு போதை ஆகி விடுகிறார்.

போதை மயக்கத்தில் இருந்து தெளிந்து அங்கிருந்து கிளம்பும் போது ஒரு அறையில், ஒரு ஆண் பிணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மறுப்பக்கம் ஸ்வயம் சித்தா, திடீரென்று மயங்கி விழுகிறார்.

இந்த நிலையில், அந்த வீடு டிஜிட்டல் லாக் சிஸ்டம் என்பதால், கதாநாயகன் விக்ரம் ரமேஷ், கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கொள்கிறார்.

இதற்கிடையே, கதாநாயகி ஸ்வயம் சித்தா வீட்டுக்குள் திருடுவதற்காக கார்த்திக் வெங்கட்ராமன் நுழைய அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ-வான சிவகுமார் ராஜுவும் வீட்டுக்குள் நுழைகிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன் எம்.எல்.ஏ-வான சிவகுமார் ராஜ் முன்று பேரும் அந்த கதாநாயகி ஸ்வயம் சித்தா வீட்டுக்குள் சிக்கிக்கொள்ள இவர்கள் மூவரும் தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? கதாநாயகி ஸ்வயம் சித்தா என்ன நடந்தது? வீட்டுக்குள் இறந்த கிடக்கும் ஆண் பிணம் யார்? என்பதுதான் இந்த ‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக விக்ரம் ரமேஷ் நடித்திருக்கிறார்.

அறிமுக நடிகர் விக்ரம் ரமேஷ், இந்தத் திரைப்படம் தான் முதல் திரைப்படம் போல் இல்லாமல் பல திரைப்படங்கள் நடித்தது போல் முதல் திரைப்படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

முதல் திரைப்படத்திலேயே அறிமுக நடிகர் விக்ரம் ரமேஷ், ரசிகர்கள் மனதில் பதிகிறார்.

இந்த ‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்திருக்கிறார்.

கதாநாயகி சுவயம்சித்தா மிகவும் அற்புதமாகவும் கவர்ச்சியான பார்வையிலும் ரசிகர்களை கவனத்தை ஈர்க்கிறார்.

எம்.எல்.ஏ-வாக வரும் சிவகுமார் ராஜு திருடனாக வரும் கார்த்திக் வெங்கட்ராமன் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வே ரசிகர்களுக்கு தெரியாதபடி, பல்வேறு கோணங்களில் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் அருமை.

கதை நடக்கும் அந்த வீட்டையே ஒரு கதாபாத்திரமாக நம் கண்முன் நிறுத்திவிடுகிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம்.

படத்தொகுப்பாளர் முகன்வேல் படத்தொகுப்பு மிகவும் நேர்த்தியாகவும் வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் கத்திரிக்கோலை கையாண்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் கலாசசரண் இசை மற்றும் இசையில் “ஃபன் டமக்கா…” பாடல் ஆட்டம் போட வைப்பதோடு, அருமையாக இருக்கிறது.

இசையமைப்பாளர் கலாசசரணின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை மிகவும் ஜாலியான திரைப்படமாகவும்
நல்ல கதை முழு திரைப்படமும் ஒரு வீட்டுக்குள், மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நடந்தாலும், எந்த இடத்திலும் போராடிக்காதவாறு திரைக்கதை மூலம் சில பல விசயங்களை வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

மொத்தத்தில், ‘எனக்கு எண்டே கிடையாது’ படத்தை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

 

ரேட்டிங் 3.5/5