
நடிகர் & நடிகைகள் :- விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, கலைராணி, ஓஏகே சுந்தர், ஜான் மகேந்திரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சி எஸ் அமுதன்.
ஒளிப்பதிவு :- கோபி அமர்நாத்.
படத்தொகுப்பு :- டி.எஸ். சுரேஷ்.
இசையமைப்பாளர் :- கண்ணன் நாராயணன்.
தயாரிப்பு நிறுவனம் :- இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கமல் போஹ்ரா, ஜி.தனஞ்சயன், பிரதீப் பி மற்றும் பங்கஜ் போஹ்ரா.
உலக அளவில் புகழ் பெற்ற புலனாய்வு பத்திரிகையாளரான கதாநாயகன் விஜய் ஆண்டனி, சொந்த விஷயம் காரணமான தன் பத்திரிகையாளர் வேலையை விட்டுவிட்டு ஒதுங்கி, கல்கத்தாவில் தனது மகளுடன் தனது மனைவி இழந்த சுகத்தால் வாழ்ந்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பரான வானம் பத்திரிகையின் ஆசிரியர், செழியன் பத்திரிக்கை அலுவலகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ‘வானம்’ பத்திரிகையின் முதலாளி நிழல்கள் ரவி மூலம் நெருங்கிய நண்பரான வானம் பத்திரிகையின் ஆசிரியர் செழியன் கொலை செய்யப்பட்ட விசயம் அறிந்த கதாநாயகன் விஜய் ஆண்டனி மீண்டும் தன் பத்திரிகையாளர் பணியை தொடங்குகிறார்.
பத்திரிகை ஆசிரியர் செழியன் கொலை நடந்தது மிகப்பெரிய நடிகரின் வெறித்தனமான ரசிகரால் செய்யப்பட்டது காவல்துறை மற்றும் அனைவரும் நம்ப கதாநாயகன் விஜய் ஆண்டனிக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. இதையடுத்து, வானம் பத்திரிகையின் ஆசிரியர் செழியன் கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி.
தன் நெருங்கிய நண்பர் செழியன் கொலை மட்டுமல்லாமல் வேறு சில கொலைகளை ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தாக வேண்டும் என களத்தில் இறங்குகிறார். தன் நெருங்கிய நண்பர் செழியன் மட்டும் அல்ல மேலும் சிலர் இதே முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதை உடனே கண்டுபிடிப்பதோடு இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய நெட் ஒர்க் ஒன்று இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்.
அந்த நெட் ஒர்க் தலைமை யார்?, கொலை செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கும் என்ன தொடர்பு? நெட்வொர்க் தலைமை யார் என்று கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ரத்தம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ரத்தம்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனி இல்லாமல் வேறு எந்த ஒரு நடிகரும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்திருக்க மாட்டார்கள். மிக அழுத்தமான முகம், தெள்ளத் தெளிவான பார்வை, மிக கூர்மையான சிந்தனை என அனைத்து உணர்வுகளை மிக நேர்த்தியாக நடிப்பின் மூலம் வெளிக்காட்டியது திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பலம்
கதாநாயகிகளாக அல்லாமல் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரமாக ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று நடிகைகளும் மிக அருமையாக நடிப்பின் மூலம் பயணித்திருக்கிறார்கள்.
மஹிமா நம்பியாரின் அழகும், அதனுள் ஒளிந்திருக்கும் ஆபத்தும் இருக்கிறது. வானம் பத்திரிகையின் முதலாளியாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அருமையாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், ஒளிப்பதிவு மிகவும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இசை மற்றும் பாடல்கள் அருமையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. “ரத்தம்…ரத்தம்…” தீம் பாடல் மற்றும் புரோமோ பாடல் இரண்டுமே கதைக்களத்திற்கு ஏற்ற பாடல்களாக இருப்பதோடு, ரசிகர்கள் முனுமுனுக்க வைக்கிறது.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், படத்தொகுப்பு அருமை.
இந்த கொலைகளை எல்லாம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லாமலே சாமர்த்தியமாக கடந்து சென்று விடுகிறார். ஒன்றன் பின் ஒன்றாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் வந்தபடி இருக்கின்றன. எல்லா காட்சிகளும் ஏற்கனவே நாம் பார்த்த வேறு ஒரு திரைப்படத்தை நியாபகப் படுத்துகின்றன. நல்ல ஒரு கதையை கையில் எடுத்து அதை சராசரிக்கும் குறைவான சுவாரஸ்யத்தில் கொடுத்திருக்கிறார் சி.எஸ் அமுதன்.
மொத்தத்தில் ரத்தம் திரைப்படம் ‘ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படம்.
ரேட்டிங் 3.5/5