“ஜோ” – திரைவிமர்சனம்

162

 

 

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஜோ”.நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி காதலை நினைவுபடுத்தும் வகையில் உருவாகி இருக்கிறது ‘ஜோ’.
பொறியியல் கல்லூரியில் படிக்கி றார் ஜோ (ரியோ ராஜ்). அதே கல்லூரியில் வந்து சேர்கிறாள் சுஜி ( மாளவிகா மனோஜ்). கேரள பெண் சுஜியின் அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்ளும் ஜோ அவர் பின்னாலேயே சுற்றி வருகிறார். முதலில் ஜோவை தவிர்க்கும் சுஜி  பின்னர் அவரது காதலை ஏற்கிறார். இருவரும்  ஜாலியாக  காதல் வானில் சிறகடிக்கின்றனர்.  ஒரு கட்டத்தில் இவர்கள்.காதலுக்கு சுஜி வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது மனம் உடைந்த சுஜி தற்கொலை செய்து கொள்கிறார். காதலி இறந்த துக்கத்தில் ஜோ குடிகாரன் ஆகிறான்  அவனது நிலைமையை கண்டு கலங்கும் பெற்றோர் வேறு ஒரு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்கின்ற னர்.  ஜோவை திருமணம் செய்த பெண்ணின் வாழ்வில். இளம் வயதில் நேர்ந்த கசப்பான அனுபவம் மனதளவில்  அவரை  பாதிக்கிறது. இருவருக்கும் மனம் ஒத்துப் போகவில்லை. ஒரு கட்டத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்கிறார் ஜோ. அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
கேரள பெண் குட்டிகள் என்றாலே நம்ம பசங்களுக்கு எப்போதும் ஒரு கிரேஸ். அந்த உணர்வை நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்ராம். இந்த கதையில்  இயக்குனரின் சொந்த காதல்  அனுபவமும் இணைந்தி ருப்பதால் காட்சிகளில் நம்பகத் தன்மையும் , நிஜ காதல் உணர்வும் மேலோங்கி நிற்கிறது.
ரியோ ராஜ் கல்லூரி மாணவராக வருகிறார். இளமை முகம் கொஞ்சம் மாறி மெச்சூர்ட் ஆக இருந்தாலும் காதல். உணர்வுகளை வெளிப்படுத்துவதில்  துள்ளல் காட்டுகிறார்.
மாளவிகா மனோஜின்  வசீகர மலையாள பெண் குட்டியின்  ஈர்ப்பு இளசுகளை கட்டிப்போடுகிறது.   ரியோ ராஜ் தன் மீது காதல் கணைகளை விடும்போது அதை கண்டும் காணாமல் செல்வதும்  பின்னர் காதல் வந்ததும் அவரை விட்டுபிரியாமல் ஒட்டி உரசி காதல்.சரசமாடுவதும் முத்தங் களை இளமை  வெறியுடன் பகிர்ந்து கொள்வதும்  காதலின் அழுத்தத்தை உணர்த்துகிறது.
இந்த காதலுக்கு இடையூறு வரும்.என்ற சந்தேகம் உறுதியாகும்போது மனம்.கனக்கிறது.
ரியோ ராஜுக்கு கழுத்தை நீட்டும் பவ்யா டிரிகா எப்படியும் அவருடன். இணக்கமாக இருக்கப்போவ தில்லை என்ற  யூகமும் நிஜமாகி இருவருக்கும் அடிக்கடி நடக்கும். உரசல் ஏதோ.மற்றொரு விபரீதத்தை கொண்டு வந்து விடுமோ.என்ற பயத்தை ஏற்படுத்துவது காட்சிகளை  வேகமாக நகர்த்துகிறது.பவ்யாவும் நிறைவான நடிப்பை தந்து காட்சிகளை உயிருள்ளவை களாக மாற்றியிருக்கிறார். ரியோவின் 2 நண்பர்களாக  வருபவர்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சார்லியும்  மறக்க முடியாத பாத்திரங்களாக பதிகின்றனர்.
யாருக்கோ செய்யும் சிறு உதவி எதிர்பாராத நேரத்தில் நமக்கு உதவும் என்ற நம்பிக்கையை படத்தின் கருவாக தந்திருக்கும் இயக்குனர் நம்பிக்கை இழந்து தவிப்பவர்களுக்கு  வாழ்க்கை யில்.புதிய பிடிப்பை ஏற்படுத்தும்  அந்த வகையில்.இயக்குனர்
ஹரிஹரன் ராம் மனங்களை வென்றிருக்கிறார்.
ராகுல் கே ஜி விக்னேஷ் ஒளிப்பதிவு ரம்யம். படத்திற்கு  துடுப்பாக கைகொடுத் திருக்கிறது. சித்து.குமார் இசை. இதுபோன்ற மெலடியும் துள்ளலும் கலந்த இசை கலவையை தமிழில் கேட்டு நீண்ட நாள் ஆகிறது.

 

ரேட்டிங் 3.5/5