‘போர்’ திரைப்பட விமர்சனம்

173

 

 

CHENNAI:

மருத்துவக் கல்லூரியின் மூத்த மாணவரான அர்ஜூன் தாஸ் மீது, இளைய மாணவர் காளிதாஸ் ஜெயராமுக்கு தனிப்பட்ட பகை இருக்கிறது. இந்த பகையை தீர்த்துக்கொள்வதற்காக அவர் அர்ஜூன் தாஸ் தொடர்புடைய ஆட்களை சீண்டுவதோடு அதை கல்லூரி மோதலாகவும் மாற்ற முயற்சிக்கிறார். காளிதாஸின் எண்ணத்தை புரிந்துக்கொண்டு ஒதுங்கி செல்லும் அர்ஜூன் தாஸ், ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் பொங்கி எழு, என்ற ரீதியில் ஜெயராம் காளிதாஸ் தொடங்கிய போரை முடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

 

மறுபக்கம், கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தலில் அரசியல் தலைவரின் மகளை எதிர்த்து போட்டியிடும் பெண் மீது சாதி வன்கொடுமை நடக்கிறது. அதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசியல்வாதியின் மகள் மீது போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய, அவருடைய அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இதனால், தன்னை எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்ட முடிவு செய்யும் அரசியல்வாதியின் மகள், அதற்காக கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதலை தனக்கு சாதகமாக பயன்படுத்த, அதன் பிறகு என்ன நடக்கிறது, என்பது தான் ‘போர்’.

நாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார்.என்றுதான் சொல்லணும் வழக்கும் போல் தனது குரல் மூலம் மிரட்டினாலும், இந்த படத்தில் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். பிரபு என்ற கதாபாத்திரத்தில் மூத்த மாணவராக, கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் அனல் பறக்கிறது. தமிழ்யில் நிச்சயம் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வளம் வருவார்.

இதுவரை மிகவும் மென்மையான பாத்திரங்களில் வளம் வந்த காளிதாஸ் இந்த படத்தில் இளைய மாணவராக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம், முரட்டுத்தனமான தோற்றத்துடன், முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பள்ளியில் நடந்த துரோகத்தை மனதில் வைத்துக்கொண்டு, அர்ஜூன் தாஸ் மீது அவர் காட்டும் வன்மம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.

நாயகிகளாக நடித்திருக்கும் டி.ஜெ.பானு மற்றும் சஞ்சனா நடராஜன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீனிவாசன், காமெடி வேடத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு சுறுசுறுப்பளித்தாலும், பல இடங்களில் மந்தமாக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.

இயக்குநர் பிஜாய் நம்பியார் ரசிகர்களுக்கான திரைப்படமாக அல்லாமல் தனக்கான திரைப்படமாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்பதை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்திருப்பவர், மணிரத்னம் பாணியில் திரைக்கதையோ அல்லது கதாபாத்திரங்களையோ வடிவமைக்க தவறிவிட்டார்.

 

இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதலை, கல்லூரி மாணவர்களின் வாழ்வியல் மற்றும் சாதி அரசியலோடு சேர்த்து சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லாமல், போரடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிஜாய் நம்பியார். ரசிகர்களுக்கான திரைப்படமாக அல்லாமல் தனக்கான திரைப்படமாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்பதை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்திருப்பவர், மணிரத்னம் பாணியில் திரைக்கதையோ அல்லது கதாபாத்திரங்களையோ வடிவமைக்க தவறிவிட்டார். மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகம் என்று சித்தரித்திருப்பது மிகைப்படுத்தும் வகையில் உள்ளது.விதவிதமான பெயர்களுடன் போதைபொருட்களின் பெயர்களை உச்சரிப்பதையெல்லாம் திரையில் தவிர்த்திருக்கலாம். இந்தக் குறையைத் தாண்டி நுட்பமாகப் பல விசயங்கள் குறித்த உரையாடல் நிகழ்த்த முனைந்திருக்கிறார் பிஜாய்நம்பியார்.

மொத்தத்தில், இந்த ‘போர்’ ரசிகர்களை வெறுப்பேற்றும்.