
CHENNAI:
படம்: உயிர் தமிழுக்கு
நடிப்பு: அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணியம் சிவா, மகாநதி சங்கர், ராஜா சிம்மன், சக்தி சரவணன்மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பு: ஆதம் பாவா
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ஆதம் பாவா
பிஆர்ஓ: ஏ. ஜான்.
தமிழ் சினிமாவில் அமீர் சிறந்த இயக்குனர் மட்டும் இல்லை தான் ஒரு சிறந்த நடிகர் பல படங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறார். அனால் இதுவரை மிகவும் சீரியஸ் படங்களில் வளம் வந்த ஆமீர் முதல் முறையாக நகைசுவை அவதாரம் எடுத்துள்ளார்.அமீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கிள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’
தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக பாண்டியன் ஊர் மக்களுக்கு உதவிகள் செய்து எம்ஜிஆர் பாண்டி என்று பெயர் எடுக்கிறார். இந்நிலையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நண்பர் சுடலை (இமான் அண்ணாச்சி)யுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் பாண்டியன் அங்கே எதிர்கட்சி அமைச்சர் பழக்கடை ராமச்சந்திரனின் (ஆனந்தராஜ்) மகள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்செல்வியை (சாந்தினி ஸ்ரீதரன்) பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார்.அதனால் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக மக்கள் முன்னணி கட்சி சார்பாக அமீர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதன்பின் தமிழ்செல்வியை சந்தித்து பேசலாம் என்ற எண்ணத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இறுதியில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்செல்வியை காதலித்தாலும், அரசியல் தந்தையின் எதிர்ப்பு வலுக்கிறது. இந்நிலையில் மர்ம நபர்களால் பழக்கடை ராமச்சந்திரன் கொல்லப்பட, இதற்கு காரணம் பாண்டியன் தான் என்று உறுதியாக போலீஸ், எதிர்கட்சி நம்ப தமிழ்செல்வியும் பாண்டியன் தான் தன் தந்தையை கொன்றார் என்று அழுத்தமாக நம்பி பாண்டியனை வெறுக்கிறார்.இறுதியில் தான் நிரபராதி என்று பாண்டியன் எப்படி நிரூபிக்கிறார்? அதன் பின் தமிழ்ச்செல்வி காதலை ஏற்றுக் கொண்டாரா? பாண்டியன் தமிழ்ச்செல்வி இணைந்தார்களா? என்பதுதான் உயிர் தமிழுக்கு’ படத்தின் மீதிக் கதை.
அமீர் பாண்டியனாக கதர் வேட்டி, சட்டை அணிந்து பேசி நக்கல், நையாண்டிதனத்துடன் அரசியல் வசனம் பேசி காதலிக்காக அரசியலில் நுழைந்து பின்னர் அரசியல் கற்று முழு நேர அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தி சமகால அரசியலை கிண்டலடித்து செய்யும் அளப்பறைகள் திரையரங்கை அதிரவைக்கிறது அதேபோல வாக்கு சாவடி குளறுபடிகள் என்று இயல்பான நடிப்பாலும், நம்மை கவருகிறார் எம்ஜிஆர் பாடல் நடனத்திலும் கவர்கிறார். பாராட்டுக்கள்.
சாந்தினி ஸ்ரீதரன் தமிழ்செல்வியாக இவரைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்ந்தாலும், அழகு பதுமையாக மட்டுமே வந்து போகிறார். இருப்பிலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்து இருக்கிறார். அ மீர் கிட்ட மாட்டிக் கொண்டு திண்டாடும் அப்பாவி சுடலையாக இம்மான் அண்ணாச்சி, ஆனந்தராஜ் பழக்கடையார் ராமச்சந்திரனாக, தலைவராக (திருச்செல்வம்) ராஜ் கபூர்,சேதுவாக சரவண சக்தி, மாரி முத்து டி.என்.எஸ், பரமனாக கஞ்சா கருப்பு, சுப்ரமணியம் சிவா என்று ஏகப்பட்ட நட்சித்திர பட்டாளத்துடன் களமிறங்கி அரசியல் நகைச்சுவைக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பின் இசையமைத்துள்ளார் வித்யாசாகர். பாடல்களும் பின்னணி இசையும் நம்ம ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் தேவராஜ், அமீரின் நடனத்தை எப்படி காட்சிப்படுத்தினால் ரசிக்கும்படி இருக்கும் என்பதை சரியான முறையில் கையாண்டிருக்கிறார்.
தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் காதல் கதையை ஜாலியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆதம்பாவா, மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் தியானம், அதே நினைவிடத்தில் ஒருவர் போட்ட சபதம், ஆன்மீ அரசியல் உள்ளிட்ட பல விசயங்களை திரைக்கதையுடன் சேர்த்து சிரிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ’உயிர் தமிழுக்கு’ எல்லா ரசிகர்களும் பார்க்கலாம்.
ரேட்டிங் 2.5/5