‘வேதா’- திரைப் பட விமர்சனம்!

179

 

சென்னை:

ராணுவத்தில் இருக்கும் ஜான் ஆபிரகாம் மேலதிகாரியின் சொல்லை மீறி நடந்ததற்காக அவரை ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்கின்றனர். வெளியில் வரும் அவர் பாக்சிங் பயிற்சி பள்ளியில் உதவியாளராக சேர்கிறார். வடமாநிலத்தில் பின்தங்கிய கிராமத்தில் இருக்கும்  ஒடுக்கப்பட்ட மக்களை அந்த ஊரில் உள்ள மேல்சாதி யினர் அடிமைத்தனமாக நடத்து கிறார்கள். பாக்ஸிங் கற்க விரும்பும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை அனுமதிக்க மறுக்கும் மேல்சாதியினர் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை. குடும்பத்தோடு   தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றனர். அந்தப் பெண்ணை ஜான் ஆபிரகாம் எப்படி காப்பாற்றுகிறார், மேல் ஜாதியினரின் அடக்குமுறையில் இருந்து அந்த பெண்ணால் வெளிவர முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

தமிழில் பா ரஞ்சித்  உருவாக்கும் படத்தைப்போல் அவரது பாணியில் இப்படத்தை  ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உருவாக்கி இருக்கிறார் ஹிந்தி பட இயக்குனர்  நிகில் அத்வானி.

கட்டுமஸ்தான உடற்கட்டுடன் வருகிறார் ஜான் ஆபிரகாம். ராணுவத்தில் இருந்து வந்தாலும் தனது கெத்தை விடாமல் அவர் கம்பீரமாக நடந்துக்கொள்வது வேடத்தை முற்போக்குத்தனமாக காட்டுகிறது.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ஷர்வாரி நடித்திருக்கிறார். மேல்ஜாதியினர்  எவ்வளவு தான் எதிர்ப்பை காட்டினாலும் பாக்சிங்கில்  சேர்ந்து சாம்பியனாக வேண்டும் என்ற பிடிவாதம்  ஷர்வாரியை  ஹீரோயினாக தூக்கிப்பிடிக் கிறது.

ரவுடி கூட்டத்திலிருந்து உயிர் பிழைக்க ஜான் ஆபிரகாம் உடன் தப்பிச்செல்லும் காட்சிகளில் துணிச்சலாக நடித்து அசத்துகிறார் ஷர்வாரி. தமன்னா கெஸ்ட் ரோலில்  ஜான் ஆபிரகாம் மனைவியாக வந்து செல்கிறார்.

மேல் ஜாதியின வகுப்பைச் சேர்ந்தவர்களாக நடித்திருப்ப வர்கள் தங்களது அதிகாரத்தை நிதானமாக ஆனால் கொடூரமாக காட்டுவது வடநாட்டில் ஒடுக்கப் பட்ட மக்கள் எந்த அளவுக்கு மேல் சாதியினத்தவர்களால்  பாதிக்கப்பட்டிருக்கிறாrர்கள் என்பதை அப்பட்டமாக படம்பிடித்து காட்டி இருக்கிறது.

மொத்தத்தில் ‘வேதா’ படம் தாழ்த்தப்பட்ட இனத்திற்காக எடுக்கப்பட்ட படம்.