

The actor has played a prominent role in a Malayalam movie titled ‘Kondal’, starring the biggest names of the South Indian industry including Pepe, Raj B Shetty and many others. The film has been shot almost 80% across the mid-sea. Sharing his working experience on this film, Shabeer says, “I would say it was both challenging and amazing at the same time. Every morning, we would depart to the mid-sea, which would take almost one and a half hours, shoot over the boat, get back to the shore for lunch, and then again travel back to the same spot to resume shooting. Many had seasickness during this process, and still, we managed to get the shoot done perfectly. The producers have been such a blessing to the entire crew, as they treated everyone as their family. Their hospitality and friendly nature made the process more comfortable. I cannot reveal more about the film, but it’s going to be a special one in my career. The director’s conviction was so intense, that it pushed me out of comfort zone, and escalated my performance.”
Apart from this film, Shabeer has a couple of projects in Tamil that include AR Murugadoss’s film and Pa Ranjith’s production titled ‘Thandakaranyam’, followed by an untitled Telugu project, and Shivarajkumar’s Kannada movie ‘Bhairathi Ranagai’.
தென்னிந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 80% நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷபீர், “இந்தப் படம் சவாலாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய உணவுக்காக கரைக்கு திரும்புவோம். உணவு சாப்பிட்டுவிட்டு, அதே இடத்திற்குச் சென்று மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவோம். இதில் பலருக்கும் கடல் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனாலும், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் படப்பிடிப்பை சரியாக முடித்தோம். தயாரிப்பாளர்கள் எங்கள் அனைவரையும் தங்கள் குடும்பமாக கருதியதால், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தேவையான வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்தனர். என் சினிமா பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் சிறப்பான ஒன்றாக இருக்கும். என்னுடைய கம்ஃபோர்ட் ஸோனில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்து சிறப்பான நடிப்பை இயக்குநர் வாங்கியுள்ளார்” என்றார்.
இந்தப் படத்தைத் தவிர, ஷபீருக்கு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸின் படம் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தண்டகாரண்யம்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளது. இதைத் தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு தெலுங்கு திரைப்படம் மற்றும் சிவராஜ்குமாரின் கன்னடப் படமான ‘பைரதி ரணகை’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.