
CHENNAI:
படம்: பிளாக்
நடிப்பு: ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி ஜே பி,, ஷாரா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி
தயாரிப்பு: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இசை: சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: கோகுல் பினோய்
இயக்கம்: கே ஜி. பாலசுப்பிரமணி
பி ஆர் ஓ: ஜான்சன்.
முதலில் இந்த கதை எப்படி நிகழகிறது என்று பார்த்தால் விண்வெளியில் நிலவுக்கு அருகில் ஏற்படும் ஒரு மாற்றத்தால் பூமியில் பிளாக் ஹோல் விழுகிறது. அந்த பிளாக் ஹோல் பகுதியில் யார் சென்றாலும் அவர்களின் கால சூழல் மாறிவிடுகிறது. இந்த சம்பவத்தை மையமாக கொண்டு இக்கதையை இயக்குனர் உருவாக்கியிருக் கிறார்.
ஜீவா, பிரியா பவானி இருவரும் புதிய வீட்டிற்கு சென்றவுடன் அன்று இரவு திடீரென்று மின்வெட்டு ஏற்படுகிறது அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் எல்லாமே அமானுஷ்யம்தான்.
மாறி மாறி இந்த சம்பவங்கள் கிளைமாக்ஸ்வரை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் எதிர்வீட்டில் இருக்கும் ஜீவா திடீரென்று இவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்துவிட அங்கு இரண்டு ஜீவாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டு மோதல் நடக்கிறது. இந்தக் காட்சியை பர்பெக்ட்டாக படமாக்கி இருக்கிறார்கள்.
பிளாக் ஹோல் கான்செப்ட்டை வைத்து விஞ்ஞான ரீதியாக பிசிக்ஸ் பாடத்தில் குவாண்டம் தியரி சம்பந்தப்பட்ட விதியை மையமாக வைத்து இக்கதை உருவாக்கி இயக்கி இருக்கிறார் கே ஜி பாலசுப்பிரமணி. இதுவொரு புது அனுபவமாக இருக்கிறது.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இருள் சூழ்ந்த பகுதிக்குள் நடக்கும் காட்சிகள் தித்திக்.
சாம் சி எஸ் வித்தியாசமான பின்னணி இசை அமைத்து காட்சியை மறக்க முடியாதபடி செய்திருக்கிறார்.
விஞ்ஞான ரீதியான படமாக இருக்கும் நிலையில் அதற்கான பட்ஜெட் ஒதுக்காமல் கையடக்க ஒரு பட்ஜெட்டை வைத்துக் கொண்டு காட்சிகளை படமாக்கி இருப்பது அதன் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. பலருக்கு இந்த படத்தை பார்க்கும்போது என்ன நடக்கிறது என்பதே புரியாமல் கூட போகலாம். ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்தால் கூட புரிதல் கடினம்தான். பிசிக்ஸ் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள் அதுபற்றி தெரியாதவர்கள் பேய் படம் என நினைப்பார்கள்.
ரேட்டிங் 2.5/5