‘அஸ்திரம்’ – திரைப்பட விமர்சனம்!

107

 

 

CHENNAI:

படம்: அஸ்திரம்

நடிப்பு: ஷாம், நிரா, ரஞ்சித், டி.எஸ்.எம், வென்பா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அரோல் டி சங்கர், விடேஷ் ஆனந்த், மாஸ்டர் மார்டின் மற்றும் பலர்.

தயாரிப்பு: தன சண்முகமணி

இசை: சுந்தர மூர்த்தி

ஒளிப்பதிவு: கல்யாண்

இயக்குனர்: அரவிந்த் ராஜகோபால்

பி ஆர் ஓ: A. ஜான்.

வித்தியாசமான முறையில் தொடர்ந்து தன்னைத்தானே உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலைகள் அடிக்கடி நடந்து வர அதன் பின்னணியில் ஏதோ ஒரு மிகப்பெரிய மர்மம் உள்ளதாக அறிந்து கொள்ளும் காவல்துறை அதிகாரி கதாநாயகன் ஷாம் அந்த விசித்திரமான வழக்கை விசாரிக்க உயர் அதிகாரியிடம் விருப்பம் தெரிவிக்கிறார்.

உயர் அதிகாரியும் ஷாமுக்கு அந்த விசித்திரமான வழக்கை விசாரிக்க அனுமதி வழங்குகிறார். கதாநாயகன் ஷாம் தன்னுடன் பணியாற்றும் ஒரு காவலரின் உதவியோடு விசாரணையை தொடங்கினார்.

இந்த விசாரணையில் எந்தவிதமான துப்பும் துலங்காமல் இருக்கும் நிலையில், தன்னுடன் கல்லூரி படித்த நண்பர் ஒருவர் ஷாமை சந்திக்கிறார். ஷாம் விசாரித்துக் கொண்டிருக்கும் அந்த விசித்திரமான வழக்கை பற்றி தற்கொலை சம்பவங்கள் பற்றியும் பல அதிர்ச்சியான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று கதாநாயகன் ஷாம், நண்பர் மற்றும் அவரை தேடி வரும் மற்றொருவரும் அதே விசித்திரமான முறையில் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதனால், காவல்துறையில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட அந்த விசித்திரமான வழக்கில் இருந்து ஷாம், கட்டாய விடுமுறையில் விட்டிற்கு அனுப்பப்படுகிறார். கட்டாய விடுமுறையில் இருந்தாலும் தன்னை சுற்றி நடந்து கொண்டிருக்கும் தொடர் விசித்திரமான தற்கொலை சம்பவங்களும், அந்த தற்கொலைகள் பற்றிய சில தடயங்கள் மற்றும் தகவல்கள் தன்னை தேடி வருவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்பதை கண்டுபிடிக்கும்  ஷாம், அதன் விசாரணையில் முழுமையான பின்னணியை கண்டுபிடிக்க முயலும் போது, பல விதமான அதிர்ச்சிகரமான சம்பவங்களும் உண்மைகளும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் ஷாம் விசாரித்துக் கொண்டிருக்கும் விசித்திரமான தற்கொலைகளை பற்றி கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘அஸ்திரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அஸ்திரம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாம் நடித்திருக்கிறார். சாந்தமான கண்வனாகவும் இருக்கிறார். நல்ல கணவனுக்குரிய அம்சங்கள் கொண்ட ஆணாகவும் படைப்பட்டிருக்கும் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து பாராட்டு பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிராவுக்கு திரைக்கதையில் முக்கிய பங்கு இல்லை என்றாலும், காவல்துறை அதிகாரி என்ற அடையாளத்தை தாண்டி, ஷாமின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அதில் ஏற்படும் இழப்புகளை ரசிகர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

நாயகன் ஷாம் உடன் வரும் காவலராக நடித்திருக்கும் புதுமுகம் சுமந்த் கவனம் ஈர்க்கிறார்.

நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர்,ஜீவா ரவி,ஜே.ஆர்.மார்ட்டின் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுக்கும் ஏற்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையும் திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.

கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் பதட்டம் காட்சிகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பிசகினாலும் சலிப்பூட்டிவிடக் கூடிய ஆபத்தைத் தவிர்த்து படம் இயல்பாகப் பயணிக்க உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பூபதி.

எழுதி இயக்கியிருக்கிறார் அரவிந்த் ராஜகோபால்.தெரிந்த கதைதானே? இப்படித்தானே நடக்கப் போகிறது? என்று அலட்சியமாகப் பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கிற மாதிரி திரைக்கதை அமைத்திருக்கிறார்.அதேபோல் இதுபோன்ற கதைகளில் இரகசியம் அவிழும்போது சாதாரணமாகிவிடும் அவ்விடத்திலும் ஒரு ஜப்பான் மன்னரின் கதையைச் சொல்லி வேறுபட்டிருக்கிறார்.

மொத்தத்தில், ‘அஸ்திரம்’ நிச்சயம் ரசிகர்களை கவரும்.