‘வள்ளுவன்’ திரைப்பட விமர்சனம்!

96

 

சென்னை:

 

நடிகர்கள் :-

 

சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன்

 

தொழில் நுட்பக் குழு:-

 

எழுத்து – இயக்கம்: சங்கர் சாரதி
தயாரிப்பாளர்: ஷைல்குமார் ராஜேந்திரன்
இணை தயாரிப்பாளர்கள்: வி. பாலச்சந்தர், நஞ்சுண்டே கவுடா, சதீஷ் ராஜேந்திரன்
தயாரிப்பு நிறுவனம்: ஆறுபடை புரொடக்ஷன்ஸ்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
மக்கள் தொடர்பு: புவன் செல்வராஜ்

 

கதாநாயகன் சேத்தன் சீனு சென்னையில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறார். அவளது இந்தச் சேவை மனப்பான்மை   சேத்தன் சீனுவின் மனதைத் தொடுகிறது. அவளுக்குத் தெரியாமலேயே அந்த முதியோர் இல்லத்திற்குப் பல உதவிகளைச் செய்கிறான். ஒரு கட்டத்தில் இந்த உண்மை  ஆஷ்னா சாவேரிக்குத் தெரியவர, இருவருக்குள்ளும் ஒரு அழகான, தூய்மையான நட்பு மலர்கிறது..

 

இந்த நட்பு காதலாகவும் மாறிவிடுகிறது. இந்த சூழலில் அரசியல்வாதி ஒருவரை மர்ம மனிதர் கொடூரமாக கொலை செய்வதோடு அவர் உடலில் சில தமிழ் வார்த்தைகளை எழுதிவிட்டு செல்கிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் ராஜசிம்மனும் அதே பாணியில் கொலை செய்யப்படுகிறார். இந்த தொடர் கொலை வழக்கு காவல்துறை அதிகாரி பிரேம் குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் வழக்கை கையில் எடுத்த சில நாட்களில் அதே பாணியில் பிரபல வழக்கறிஞர்  கராத்தே ராஜாவும்  கொலை செய்யப்படுகிறார்.

 

போலீஸ் டிபார்ட்மெண்ட் அரண்டு போய் கிடக்க, புதிதாக பிரேம்குமார் என்ற இன்ஸ்பெக்டரிடம் இந்த வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் போலீஸ் கமிஷனர்.கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவர்களின் உடலில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அது திருக்குறள் என்று கண்டறியும் பிரேம்குமார், கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்க தீவிர விசாரணையில் ஈடுபடுகிறார். இந்த மூன்று பேரால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர்தான் இந்தக் கொலைகளை செய்து வருகிறார் என்பதை கண்டறிகிறார் பிரேம்குமார். இந்த நிலையில், பிரேம்குமாருக்கு எல்லா கொலைகளுக்கும் நாயகன் சேத்தன் சீனுதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வர, அவர் மீது சந்தேகம் எழுகிறது. இறுதியில் பிரேம்குமார் கொலைகள் செய்த குற்றவாளியை கைது செய்தாரா? இந்தக் கொலைகளுக்கு காரணம் என்ன? என்பதை “வள்ளுவன்” படம் பார்த்தால் புரியும்.

 

சேத்தன் சீனு, ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்ட் இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். குறிப்பாக குடும்பத்தைச் சுற்றி நகரும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு மனதைத் தொடுகிறது.

 

ஆஸ்னா சாவேரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றினாலும், தனது கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் சுமந்துள்ளார். ஆரம்பத்தில் வழக்கமான கமர்ஷியல் நாயகியாக வலம் வந்தாலும், இறுதியில் அவர் எடுக்கும் அவதாரம் எதிர்பார்க்காத ஒன்று.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், காவலராக நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சென்னை நகரத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

திருக்குறளின் கருத்துக்களை மையமாக வைத்து, சமகால சமூக பிரச்சனைகளுடன் இணைத்து சொல்லப்பட்டிருப்பது படத்தின் தனிச்சிறப்பு. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து படம் பதிவு செய்யும் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இடைவேளைக்குப் பின் வரும் திருப்பம் கதைக்கு ஓரளவு உயிர் கொடுத்தாலும், அது முழு படத்தையும் காப்பாற்றும் அளவுக்கு வலிமையாக