“ஜின்” திரைப்பட விமர்சனம்.!

118

 

CHENNAI:

நடிகர் & நடிகைகள் :-

முகேன் ராவ், பவியா திரிகா,  வடிவுக்கரசி, பாலசரவணன், ராதா ரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்திவிக், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- – டி ஆர் பாலா

ஒளிப்பதிவாளர் :- அர்ஜுன் ராஜா.

படத்தொகுப்பாளர் :- தீபக்.

இசையமைப்பாளர் :- விவேக் மெர்வின்.

தயாரிப்பு நிறுவனம்:- ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ்  விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- – டி ஆர் பாலா, அனில் குமார் ரெட்டி, வெங்கடாச்சலம்,

மலேசியாவில் உள்ள  ஹோட்டலில் கதாநாயகன் முகின் ராவ் தனது நண்பர்களோடு சேர்ந்து மியூசிக் குரூப்பில் பாடகராக இருந்து வருகிறார்.

கதாநாயகன் முகின் ராவுக்கு மலேசியாவில் வேலை பார்ப்பதற்கு விசா  முடிந்ததால் அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வருகிறார்.

சென்னைக்கு கிளம்பும் சமயத்தில் மலேசியாவில் உள்ள பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்கு கதாநாயகன் முகேன் ராவ், செல்கிறார்.

பழங்கால பொருட்கள் விற்கும் கடையில் பெட்டி ஒன்றை பார்க்கிறார்.

அந்த பெட்டியில் ஜின் ஒன்றை அடைத்து வைத்திருப்பதாகவும் அது நல்ல ஜின் என்று கடைக்காரர் கூறுகிறார்

இது மனிதர்களைப் போலவே, ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒரு வேறுபட்ட உலகத்திலிருந்து வந்தவை.

ஜின் களில் பல வகைகள் இருக்கிறது, சில ஜின் நல்லவை, சில ஜின் கெட்டவை) கதாநாயகன் முகேன் ராவ் நல்ல ஜின் எடுத்துக் கொண்டார்.

நல்ல ஜின் எடுத்துக் கொண்ட கதாநாயகன் முகேன் ராவ் அதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு திரும்பிக்கிறார்.

சென்னைக்கு வந்ததும்  கதாநாயகி பவ்யா தரிகாவை சந்திக்கிறார்.

இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து, உடனே கதாநாயகன் முகேன் ராவ் கதாநாயகி பவ்யா தரிகாவை காதலிக்க தொடங்குகிறார்.

கதாநாயகன் முகேன் ராவ் கதாநாயகி பவ்யா தரிகாவின் இவர்களின் காதல் நிரூபித்த சமூகத்துடன் திருமணத்தில் முடிவடைகிறது.

கதாநாயகன் முகேன் ராவ் மலேசியாவில் இருந்து எடுத்து வந்த ஜின்’னை, அவருடைய வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.

இந்த வீட்டிற்கு ஜின் வந்ததில் இருந்து அபசகுணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது என  கதாநாயகன் முகேன் ராவ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நினைக்கிறார்கள்.

வீட்டில் தனியாக இருக்கும் கதாநாயகி பவ்யா தரிகா தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறார்.

கதாநாயகி பவ்யா தரிகாவின் இந்த நிலைக்குக் காரணம், இந்த ஜின் தான் என்று வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கூற, கோபத்தில் கதாநாயகன் முகேன் ராவ் இந்த ஜின்’ஐ தூக்கி வெளியே வீசி விடுகிறார்.

அதன்பிறகு, கதாநாயகன் முகேன் ராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது.? கதாநாயகி பவ்யா தரிகா  காப்பாற்றப்பட்டாரா?, காப்பாற்றப்படவில்லையா? என்பதுதான் இந்த ஜின் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜீன் திரைப்படத்தில் கதாநாயகனாக முகேன் ராவ் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் முகேன் ராவ், நல்ல எனர்ஜியான தனது கதாபாத்திரத்தை மிகவும்  அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி பவ்யா தரிகாவுடன் காதல், ஆக்‌ஷன், என பால சரவணனோடு காமெடி என தனக்கானதை மிக அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த ஜீன் திரைப்படத்தில் கதாநாயகியாக  பவ்யா தரிகா  நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக  பவ்யா தரிகா  அழகாகவும் வந்து நடிப்பில் அளவாகவும் நடித்து வரும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் முகேன் ராவ்  நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணனின் காமெடி திரைப்படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன் என அனைத்து சீனியர் நடிகர்களும் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் :- அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

ஜின் திரைப்படத்தில் அடுத்த காட்சி இதுதான் வரும் என திரைப்படம் பார்க்கணும் ரசிகர்கள் எளிதாக திரைப்படத்தின் கதையை யூகிக்கும் வண்ணம் திரைக்கதை எழுதியிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் உடம்பிற்குள் இருக்கும் ஜின்’னை வெளியேற்றும் காட்சிகள் மிரள வைத்தது போல மற்றும் எந்த காட்சிகள்  திரைப்படத்தில் மிரள வைக்கவில்லை.

ரேட்டிங் 2.8/5