
CHENNAI:
நடிகை வரலட்சுமி சரத்குமார், இலங்கையின் பிரமாண்டமான Cinnamon Life – City of Dreams இடத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தனக்கே உரிய சீரான அழகையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞர் கேசரா எடுத்த இந்த போட்டோக்கள், ‘கருப்பு வெள்ளை’ மற்றும் ‘பேஸ்டல்’ நிறங்களில் வரலட்சுமியின் இயல்பான பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பதிவு செய்கின்றன. (Instagram: @kesara_art)
மெல்லிய நிறங்களில் கட்டமைக்கப்பட்ட ஆடைகளில் தோன்றும் அவர், சினிமாவின் ஆழத்தையும், எக்காலத்திலும் மரையாத ஃபேஷனையும் கலந்து சுமந்திருக்கிறார். “கம்பீரமாக இரு , ஒவ்வொரு புகைப்படமும் ” எனும் அவரது விளக்கம், வெறும் வார்த்தையல்ல – திரைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர் கட்டியெடுத்த தனி அடையாளத்தின் பிரதிபலிப்பாகும்.
‘The Verdict’ போன்ற படங்களில் அவரின் அடக்கமும் ஆழமும் கலந்த நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தன்னிச்சையான தேர்வுகளால் இன்று வரலட்சுமி, தனது தலைமுறையின் மிகவும் தைரியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
தற்போது பல்வேறு பருவங்களில் உள்ள திரைப்படங்கள் மூலம், இன்னும் பல உயரங்களை அடையத் தயாராக இருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கதைகளாக இருந்தாலும், உள்ளடக்கம் சார்ந்த படைப்பாக இருந்தாலும் – அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் இருக்கும்.
இந்த போட்டோஷூட் வெறும் ஃபேஷனுக்காக மட்டுமல்ல , இது தனது திறமையையும், தன்மையையும் முழுமையாக புரிந்து கொண்ட ஒரு பெண்ணின் ஆளுமையை பதிவு செய்திருக்கும் அழகிய படம்.
இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு கதையை தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எடுத்த முயற்சிக்காகவே அவரை பெரிதாக பாராட்டலாம். ஒரே வீடு, இரு குடும்பம், வேறு வேறு வருடங்கள், அந்த குடும்பங்களின் வாழ்க்கை என மிக நுணுக்கமான மூலக்கருவைக் கொண்டு படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.
காமெடி, எமோஷன்ஸ், காதல், செண்டிமெண்ட் என அனைத்திற்கும் இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
க்ளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் காளி வெங்கட்டின் நடிப்பு அனைவரின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.
ஒரு சில இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்தாலும், ஆங்காங்கே இன்னும் கத்துக்கனும் தர்ஷன் என்று சொல்லும்படியான நடிப்பையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் தர்ஷன்.
கதையின் நாயகியான அர்ஷா சாந்தினி பைஜூ காட்சிகளில் அழகாக காட்சியளித்திருக்கிறார். வினோதினியும் தனது பங்கினை அழகாகவே செய்து முடித்திருக்கிறார்.
இசையும் ஒளிப்பதிவும் படத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது.
திரைக்கதை ஆங்காங்கே தொய்வடைந்ததை நிச்சயம் கூறியே ஆக வேண்டும். இருந்தாலும், இயக்குனர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்.