‘மிராய்’ திரைப்பட விமர்சனம்!

129

 

சென்னை:

படம்: மிராய்

நடிப்பு: தேஜா சஜ்ஜா, மனோஜ் மன்ச்சு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெகபதிபாபு, ஜெயராம்

தயாரிப்பு: டி ஜி விஷ்வ பிரசாத், கிரித்தி பிரசாத்

இசை: கௌர ஹரி

ஒளிப்பதிவு: கார்த்திக்கட்டம் நேனி

இயக்கம்,: கார்த்திக் கட்டம் நேனி

பிஆர்ஓ: யுவராஜ் .

முன்னொரு காலத்தில் அசோக மன்னர் பல நாடுகளின் மீது படையெடுத்து அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வருகிறார். அப்போது, அவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. கிடைக்கும் சக்தியை ஒன்பது புத்தகங்களில் பிரித்து வைக்கிறார்.

ஒன்பது புத்தகத்தையும் ஒன்பது வீரர்களிடம் கொடுத்தும் வைக்கிறார். காலங்கள் கடந்து 21ஆம் நூற்றாண்டிற்கு வர, வில்லனான மனோஜ் மஞ்சு 9 புத்தகங்களை அடைந்தால் தான் அபூர்வ சக்தி கிடைக்கும். மக்களை கொன்று குவிக்கலாம் என்று எண்ணுகிறார். அதற்காக ஒவ்வொரு புத்தகங்களாக கைப்பற்றி வருகிறார் மனோஜ் மஞ்சு.

இந்நிலையில், ஸ்ரேயா தனது குழந்தையை சிறுவயதிலேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். அனாதையாக வளரும் அவரே நாயகன் தேஜா சஜ்ஜா.

இமயமலையிலிருந்து வரும் பெண் ஒருவர், மனோஜ் மஞ்சுவின் எண்ணத்தை தேஜா சஜ்ஜாவிடம் கூறுகிறார். ஒன்பதாவது புத்தகத்தை அடைந்தால், மனோஜ் மஞ்சுவை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறுகிறார்.

மனோஜ் மஞ்சுவை அழிப்பதற்காக மிராய் என்ற ஆயுதத்தைத் தேடி செல்கிறார் தேஜா. இறுதியில் மிராய் ஆயுதத்தை தேஜா கைப்பற்றினாரா.? மனோஜ் மஞ்சுவை எப்படி கொலை செய்கிறார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

அனுமன் படத்தில் நடித்து பிரபலமான தேஜா சஜ்ஜா இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். வழக்கம் போல், சூப்பர் மேன் போன்று தன்னை நினைத்துக் கொண்டு படத்தில் சுழன்று நடித்திருக்கிறார்.

மனோஜ் மஞ்சுவின் வில்லத்தனம் படத்திற்கு பலம்.

கடவுள் ராமரை மைப்படுத்தி கதை நகர்ந்திருக்கிறது. வட இந்தியாவின் அதிகமாக வணங்கப்படும் ராமர் குறித்து படங்கள் மட்டுமே சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது.. என்னதான் வலுக்கட்டாயமாக ராமரை தென்னிந்தியாவுக்குள் திணிக்க முயன்றாலும் அது வீண்தான். முருகர் மீதும், வெங்கடாஜலபதி மீதும், அம்மன்கள் மீதும் பக்தர்கள் வைத்திருக்கும் பக்தியை மாற்ற முடியாது. இனி ஒரு மாற்றத்திற்காக கிருஷ்ணர், வெங்கடாஜலபதி, முருகர், அம்மன் போன்ற பக்தி படங்களை  தருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வட இந்திய சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்காகவும், கடவுளை வைத்து அரசியல் செய்பவர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தான் ராமரை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று தோன்ற வைக்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே இப்படத்தை ஒருமுறை காணலாம்.. மற்றபடி, பெரிதான ஒரு சீரியஸ் காட்சிகள் படத்தில் இல்லை என்று தான் கூற வேண்டும்.