‘ரைட்’ திரைப்பட விமர்சனம்!

136

 

 

CHENNAI:

படம்: ரைட்

நடிப்பு: நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா

தயாரிப்பு: திருமால்

இசை: குணா சுப்ரமணியன்

ஒளிப்பதிவு: எம் பத்மேஷ்

இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ் குமார்

பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா

போலீஸ் இன்ஸ்பெக்டரான நட்டி, பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக வெளியே செல்ல, தனது மகனை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வருகிறார் அருண் பாண்டியன்.

இவரது புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரைட்டர் மூணாறு ரமேஷ், புகாரை தூக்கி எறிகிறார். இதனால், போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்படுகிறது.

இந்த சமயத்தில், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் வர, போலீஸ் ஸ்டேஷனை சுற்றி பாம் வைத்திருப்பதாகவும், யாராவது ஸ்டேஷனை விட்டு வெளியேச் சென்றால், அந்த பாம் ஒவ்வொன்றாக வெடிக்கும் என்று கூறி மிரட்டுகிறார்.

இதனால், ஸ்டேஷனே அல்லல்படுகிறது. என்ன செய்வதறியாது ஸ்டேஷனுக்குள் அனைவரும் பதட்டத்துடன் இருக்கின்றனர். அடுத்து அவர்களுக்கு என்ன நடந்தது .? நட்டி என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனான நட்டி, கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வந்து செல்லும் நட்டி, அதன் பிறகு காணாமல் போவதும், இரண்டாம் பாதியில் தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் ஓங்கி ஒலிப்பதுமாய் தனது கேரக்டரை அழகாக செய்து முடித்திருக்கிறார்.

சற்று ஓகேவான நடிப்பு என்றாலும், ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஓவரான தனது நடிப்பை அருண்பாண்டியன் குறைத்திருக்கலாம்.

அறிமுக நடிகையாக வரும் அக்ஷரா ரெட்டி சேலை கட்டிக்கொண்டிருந்தாலும் போலீஸ் சீற்றத்தை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மூணார் ரவி,  நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

குணா பாலசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் தாழ்வில்லை.பின்னணி இசையால் படத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷுக்கு சவாலான கதைக்களம்.அதை சிறப்பாக எதிர்கொண்டு படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கக்கூடிய கதை அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதை அதற்குள் அத்தியாவசியமான சமுதாயப்பார்வை ஆகியனவற்றைச் சரியாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.