CHENNAI:
படம்: பல்டி
நடிப்பு: ஷேன் நிகம், சாந்தனு, பிரீத்தி அஸ்வராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன்,
தயாரிப்பு: சந்தோஷ். டி.
இசை: சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு: அலெக்ஸ் ஜே புலிகல்
இயக்கம்: உன்னி சிவலிங்கம்
பிஆர் ஓ: யுவராஜ்.
கதையின் நாயகன்களான ஷேன் நிகான் மற்றும் சாந்தணு இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அதுமட்டுமல்லாமல், இருவரும் நல்லதொரு கபடி வீரர்கள். இவர்களோடு சேர்ந்து இன்னும் இருவரும் இவர்களுக்கு நல்லதொரு நண்பர்கள். எங்கு சென்றாலும், இவர்கள் நால்வர் மட்டுமே ஒன்றாக செல்வார்கள். கபாடி போட்டியில் வெற்றி வாகை சூடுவார்கள்.
கந்து வட்டி கொடுத்து மக்களை வாட்டி வதைக்கும் கும்பல் மூன்று இருக்கிறது. செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் மற்றும் கெளரி இவர்கள் தான் அந்த கும்பல்… இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டி நிலவுகிறது.
வட்டி கொடுக்காத நபர்களை அடிப்பதும், அவர்களை நிர்வாணப்படுத்துவதும் என பல கொடுமைகளை தனது அடியாட்களை வைத்து செய்து வருகிறார் செல்வராகவன். எப்படியாவது, தனியாக வங்கி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது இவரின் கனவு.
இந்நிலையில், செல்வராகவனின் கபாடி டீம் தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே வருவதை அறிந்த செல்வராகவன், விளையாட்டு வீரர்களான சாந்தணு, ஷேன் நிகாம் மற்றும் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட நால்வரையும் தன் டீமுக்கு வந்து விளையாடினால் அதிகமாக பணம் தருவதாக கூறுகிறார் செல்வராகவன். பணத்திற்காக ஆசைப்பட்டு, சாந்தணு உடனே ஓகே சொல்ல எதிர் அணியாக அல்போன்ஸ் புத்திரன் டீம் களமிறங்குகிறது. அல்போன்ஸ் புத்திரனின் டீமை அடித்து ஓட விடுகிறார்கள் செல்வராகவன் டீம்.
இதனால், அல்போன்ஸ் புத்திரனின் நேரடி பகையை சம்பாதித்துக் கொள்கிறார்கள் ஷேன் நிகாம் & ப்ரண்ட்ஸ். செல்வராகவன் இவர்களை பயன்படுத்தி தனது தொழிலை பெருக்க திட்டம் போட்டு, ஷேன் நிகாம் & பிரண்ட்ஸ் டீமை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்.
கபடி வீரர்களாக ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கை திசை மாறி வேறு எங்கோ செல்ல, இந்த கும்பலில் சிக்கி இவர்களின் நிலைமை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஷேன்நிகம், துடிப்பான விளையாட்டுவீரர் மற்றும் நண்பனுக்காகப் போராடும் உணர்ச்சி மிகுந்த வீரராக நடித்திருக்கிறார். வேடத்துக்குத் தக்க உடலையும் நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
கதையோட்டத்துக்கான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சாந்தனுவுக்கு இது நற்பெயர் பெற்றுத் தரும் வேடமாக அமைந்திருக்கிறது.அவரும் அதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி பிரீத்தி அஸ்ரானிக்குக் காட்சிகள் குறைவு என்றாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
செல்வராகவன்,அல்போன்ஸ்புத்திரன் ஆகிய இரு இயக்குநர்களும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.இருவருடைய தோற்றங்களும் ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் எதிரொலித்து நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் இரசித்துக் கேட்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், விளையாட்டில் வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் தாதாக்கள் பிடியில் சிக்கி வன்முறைச் சூழலுக்கு இடம்மாறுகிறார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாகச் சொல்ல முனைந்திருக்கிறார்.அவருடைய கதைக்கு இதில் நடித்திருக்கும் நடிகர்கள் வலுச் சேர்த்திருக்கிறார்கள் என்பதால் அவர் எண்ணம் ஈடேறியிருக்கிறது.
ரேட்டிங் 35