
படம் : டியூட்
நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு , சரத்குமார், ரோகிணி
தயாரிப்பு:; மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் எர்நேனி , ஒய்.ரவிசங்கர்
இசை: சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி
இயக்கம்: கீர்த்தீஸ்வரன்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்.
சென்னையில் பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய ஜாலியான நிகழ்ச்சிகளை நடத்தும் ‘ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நாயகன் பிரதீப் ரங்கநாதன். தன் வாழ்க்கையில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரதிபீடம் அவரது மாமன் மகள் மமிதா காதலை சொல்கிறார். சிறுவயதிலிருந்தே ஒன்றாக பழகியதால் நட்புதான் இருக்கிறது காதல் இல்லை என்று பிரதிப் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
இதனால் மனம் நொந்து போன மமிதா. வெளியூர் செல்கிறார் பிரிந்து சென்ற பிறகு அவர் மீது பிரதீப்பிற்கு காதல் பிறக்கிறது. மீண்டும் அவரிடம் காதல் சொல்கிறார். ஆனால் பிரதீப் காதலை மமிதா ஏற்க மறுத்து வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். ஆனாலும் சில கால இடைவெளியில் மமிதாவின் அப்பா அமைச்சர் சரத்குமாருக்கு முறை பையனான பிரதீப், மமிதாவை திருமணம் செய்துக் கொள்வதாக சொன்னதும், அ
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாக வலம் வந்திருக்கிறார் பிரதீப்.ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதே என்று நினைக்கும்போதே அதைவிடப் பெரும்சுமையைச் சுமக்கிறார்.இரண்டுவிதமான நடிப்புகளிலும் தேர்ச்சி பெற்று தான் ஒரு வெற்றிகரமான நடிகர் என நிறுவியிருக்கிறார்.
மிக கனம் பொருந்திய இந்த வேடத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வாக நாயகி மமிதா பைஜு இருக்கிறார்.அழகு, இளமை, துள்ளல் வேடத்துக்கேற்ற நடிப்பு என எல்லாவற்றிலும் கவர்கிறார்.
நாட்டுக்கு அமைச்சர், நாயகியின் பழமைவாத அப்பா வேடமேற்றிருக்கிறார் சரத்குமார்.அவருடைய நேர்மறை பிம்பத்துக்கு எதிர்மறை வேடம் என்றாலும் நடிப்பில் நிறைவு காட்டியிருக்கிறார்.
ரோகிணி, திராவிட் செல்வம், ஹிருது ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் கூடுதல் கவனம் வேண்டும்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் இளமைத்துள்ளல்.
எழுதி இயக்கியிருக்கும் கீர்த்திஸ்வரன்,முதல்படத்திலேயே ஆழமான விசயத்தைத் தொட்டிருக்கிறார். இளம்பெண்களின் வழக்குரைஞராக நின்று ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார்.அதைத் திரைமொழியில் சொல்வதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.நாயகன் பிரதீப்பும் நாயகி மமிதாவும் அவர் சிந்தனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.