
CHENNAI:
படம்: ஆண் பாவம் பொல்லாதது
நடிப்பு: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், ஏ வெங்கடேஷ்
தயாரிப்பு: வெடிக்காரன் பட்டி எஸ் சக்திவேல்
இசை: சித்து குமார்
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
இயக்கம்: கலையரசன் தங்கவேல்
பிஆர்ஓ: சதீஷ்குமார் (S2 Media)
பெற்றோர்கள் ரியோவிற்கு பெண் பார்க்கின்றனர். பெண்ணாக வருகிறார் மாளவிகா. இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போக, ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. மகிழ்ச்சியான இந்த தம்பதியின் வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடும் ஈகோ பிரச்சனைகள் வளர்ந்து விவாகரத்து வரை செல்கிறது. மாளவிகா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். ஆனால், ரியோ ராஜ் அவருடன் இணைந்து வாழ விரும்புவதாக சொல்ல, விவாகரத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
என்னதான் சிக்கல் ஏற்பட்டாலும் விவாகரத்து பெற்றே தீருவேன் என்ற பிடிவாதத்தில் மாளவிகா இருக்க, அவருடன் சேர்ந்து வாழ்வதில் ரியோ ராஜ் உறுதியாக இருக்கிறார். இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது? என்பதை தற்போதைய காலக்கட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், கலகலப்பாகவும் சொல்வதே ‘ஆண் பாவம் பொல்லாதது’.
நிகழ்கால ஜோடிகளிடையே நடக்கும் காதல் சண்டையானது எதுவரை செல்கிறது என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். 2கே கிட்ஸ் தலைமுறைகளிடையே நடக்கும் ஈகோ சண்டையை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
ரியோ மற்றும் மாளவிகா இருவரும் நிஜ தம்பதிகள் போன்று தோன்றும் அளவிற்கான நடிப்பை வாரிக் கொடுத்திருக்கிறார்கள். விக்னேஷ் காந்த் இந்த படத்தில் தான் நடித்திருக்கவே செய்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு, செண்டிமெண்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்திருக்கிறார். மேலும், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர்.
பெண் சுதந்திரத்தை இக்கால பெண்கள் எந்த மாதிரி புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் மனப்பாங்கு எது மாதிரியானது என்பதையும், படத்தில் வெளிச்சமாக காட்டியிருக்கின்றனர்.
சித்துகுமாரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே பெரிதாக படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு வெளிச்சத்தை கொடுத்துள்ளது.
ஆண்பாவம் பொல்லாதது – படம் பார்க்கலாம்.
ரேட்டிங் 3.5/5