’ஆரியன்’ திரைப்பட விமர்சனம்

100

 

 

CHENNAI:

படம்: ஆரியன்

நடிப்பு: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், மானஷா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ்

தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சுபபாரா, ஆரியன் ரமேஷ்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்

இயக்கம்: பிரவீன் கே.

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

பிக் விஷன் என்ற தனியார் தொலைக்காட்சியில் பொருளதிகாரம் என்கின்ற தலைப்பில் நேருக்கு நேர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த வாரம் அவருடனான நேரடி பேட்டியில் கலந்து கொள்ள புகழ் பெற்ற நடிகரான கைலாஷ் வந்திருக்கிறார்.

அவருடன் ஷ்ரத்தா பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து வரும் செல்வராகவன் தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கைலாஷை சுட்டு காயப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக சேனலில் தெரிவதால் நாடு முழுவதும் வைரலாகி அனைவருமே சேனலை கவனிக்கிறார்கள்.

அப்போது அவர்களிடம் பேசும் செல்வராகவன் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு கொலையாக செய்யப் போவதாக அடித்துச் சொல்கிறார். “அந்தக் கொலைகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் சாகப் போகும் நபர் யார் என்பதை நான் சூசகமாக, தான் கொலை செய்யும் ஐந்து பேரை  போலீஸ் முடிந்தால் தடுத்து பார்க்கட்டும் என்று கூறி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார் செல்வராகவன்.

இறந்தவர் எப்படி கொலை செய்ய முடியும் .,? என்று போலீஸார் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அடுத்தநாள் வீடியோ ஒன்று பொதுமக்கள் மத்தியில் உலவ, அதில் அசோக் என்பவரை தான் கொலை செய்யப்போவதாக கூறுகிறார் செல்வராகவன். அதேபோல், அசோக் என்பவர் பாம் வெடித்துக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் டி எஸ் பி ஆக வரும் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் செல்வராகவன் பற்றிய பின்புலத்தை விசாரிக்க துவங்க, அதேசமயம் ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் ஜாதகத்தை தோண்டி எடுத்து யார், யார் எதில் கனெக்ட் ஆகிறார்கள் என்பதையெல்லாம் தேடிப் பார்த்து ஓய்ந்து போகிறார்.

ஆனால் செல்வராகவன் சொன்னது போலவே ஒவ்வொரு நாளும் கொலைகள் நடக்க காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறது.

இறுதியில் விஷ்ணு விஷால் செல்வராகவன் யார் என்பதைக் கண்டுபிடித்தாரா? இல்லையா..? கொலைகள் எப்படி நடந்தன? ஏன் நடந்தன..?  என்பதை கண்டுபிடித்தாரா என்பதுதான் இந்த ‘ஆர்யன்’ என்ற படத்தின் மீதிக்கதை.

காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால், கொலை வழக்கை விசாரிக்கும் தோணியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். காட்சிக்கு காட்சி நம்மை சீட்டின் நுணியில் அமர வைத்து காட்சிகளை நகர்த்திக் கொண்டே செல்வதற்கு விஷ்ணு விஷாலின் நடிப்பு பெரும்பலமாக அமைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் அதிரடியான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் வசன உச்சரிப்பு நடிப்பு என தனது கதாபாத்திரத்தை அளவாக செய்துமுடித்திருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்திற்கு பலம் என்று கூறினால், அது செல்வராகவனின் நடிப்பு தான். மிகப்பெரும் காட்சியைக் கூட மிகவும் எளிதாக தூக்கிக் கொண்டு சென்று விட்டார். அலட்டல் இல்லாத அவரது நடிப்பு, இயல்பான உடல் மொழி ஆகியவை, அவர் செய்யும் அனைத்து விசயங்களையும் நம்ப வைத்துவிடுகிறது.

விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

வேகமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என்று படம் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் தனது பின்னணி இசை மூலம் கடத்துகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், தன் கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம், பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.

 

கொலைகளை வைத்து குற்றவாளியை பிடிக்கும் ஒரு பயணமும், கொலைகளுக்கான பின்னணியும் தான், தொடர் கொலைகளை மையமாக கொண்ட சைக்கோ திரில்லர் படங்களின் பாணி. இத்தகைய பாணியில் தான் இதுவரை வெளியாகி வெற்றி பெற்ற சைக்கோ திரில்லர் படங்களும் பயணித்துள்ளது. ஆனால், இப்படிப்பட்ட பாணி துளியும் இல்லாமல், முழுக்க முழுக்க புதிய முயற்சியில் ஒரு சைக்கோ திரில்லர் படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் பிரவீன்.கே.

 

ரேட்டிங் 3.5/5