
CHENNAI:
படம்: மெசஞ்சர்
நடிப்பு:
ஶ்ரீராம் கார்த்திக், மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன்
தயாரிப்பு: பி.விஜயன்
இசை:அபுபக்கர் எம்.
ஒளிப்பதிவு:பால கணேசன் ஆர்
இயக்கம்: ரமேஷ் இளங்காமணி
பி ஆர் ஓ: சதீஸ்வரன்
காதல் தோல்வியால் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீராம் கார்த்திக். தூக்கு மாட்டிக் கொள்ளும் நேரத்தில் அவரது முகநூலில் இருக்கும் மெஸன்ஜரில், தொடர்ந்து மெசேஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதை திறந்து பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்” என்ற செய்தி இருக்கிறது. அதை விட அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் யார் இந்த மெசேஜ் அனுப்பியது என்று கேட்டபோது, நான் இறந்து விட்டேன் உங்களை எனக்கு தெரியும் என்று பதில் வருகிறது. அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் கார்த்திக். . இது உண்மையா என்று கண்டுபிடிக்க புறப்படுகிறான். விசாரணையில் மெசேஜ் அனுப்பிய பாத்திமா என்ற பெண் சமீபத்தில் விபத்தில் இருந்தது தெரிய வருகிறது. தன் தற்கொலையை தடுத்த பாத்திமாவுடன் வாழ்க்கையை தொடர ஸ்ரீராம் கார்த்திக். எண்ணுகிறான். விபரீதம் எங்குபோய் முடிகிறது என்பதுதான் ‘மெஸஞ்சர்’ படத்தின் மீதிக் கதை.
சக்திவேலன் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக பொருந்தியிருந்தார் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக். தனது உடல் இல்லா தனது காதலியுடனான காதலை வெளிப்படுத்தும் இடத்தில் படம் பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்து விடுகிறார்.
நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார். காதலியாக கதையோடு நகர்ந்து வந்த மனீஷா ஸ்ரீ’யின் நடிப்பும் பெரிதாக பேசப்படும் அளவிற்க்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன், அழகு மற்றும் கவர்ச்சியில் கவனம் ஈர்க்கிறார்.
ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரளித்திருக்கிறது.
கிராமத்து காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பால கணேசன் ஆர் விக்கிரவாண்டி கிராமத்து பகுதியை மனதிற்கு நிறைவாக பதிவு செய்திருக்கிறார்.
காதல் கதைகளை வேறு வேறு விதமாக காட்டி வந்த தமிழ் சினிமா இயக்குனர்கள், தற்போது உடல் இல்லா காதலையும் காட்ட முயற்சித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ரமேஷ் இளங்கமணி, கதை சொல்லல், திரைக்கதையை கையாண்டது மற்றும் காட்சிகளை படமாக்கியது ஆகியவற்றின் மூலம் ஒரு தரமான படத்தை வித்தியாசமான கதைக்கருவோடு கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 2.9/5