
CHENNAI:
படம்: ரிவால்வர் ரீட்டா
நடிப்பு: கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், பிளேடு சங்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, அகஸ்டின்
தயாரிப்பு: சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் B
இயக்கம்: K சந்துரு
பிஆர்ஓ: சதீஷ் (AIM)
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் சுமக்கும் பொறுப்பு அவருடையது.புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் கொடூரன் சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. ஆனால் தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார். பதறிப்போன கீர்த்தி சுரேஷும் அவரது அம்மா ராதிகா சரத்குமாரும் அவரை வெளியே போகுமாறு விரட்டுகிறார்கள். ஆனால் சூப்பர் சுப்பராயன் துப்பாக்கியை எடுக்கிறார்.அம்மாவும் மகளும் பயந்து பதற்றத்தில் அவரைத் தட்டி விட சூப்பர் கீழே விழுகிறார். அவரை வெளியில் துரத்தும்போது ஏற்படும் மோதலில் ரவுடி கீழே விழும்போது தலையில் அடிபட்டு இறந்து போகிறார்.
அவரது மகனான சுனில், காணாமல் போன தனது தந்தையை அடியாட்களுடன் தேட, மறுபக்கம் உயிரிழந்த ரவுடியின் உடலை கைப்பற்றி அதன் மூலம் ரூ.5 கோடி பெறுவதற்காக சிலர் முயற்சிக்கிறார்கள். .இதற்கிடை
கதையின் நாயகியாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.பயம் பதட்டம் கோபம் தைரியம் என்று பலவிதமான முகபாவனைகளைக் காட்டி கவர்கிறார்.அவரது அழகான தோற்றமும் இளமையும் இந்தப் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது.
பக்திப் பரவசத்தோடு வரும் ராதிகா, அம்மா வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருப்பதோடு தன் அனுபவத்தால் திரை இருப்பை தனதாக்கிக் கொள்கிறார்.
வில்லன்களாக வரும் சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ்,காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் ஆகிய அனைவரும் பதட்டம் இல்லாமல் நடித்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிங்ஸ்லி சிரிக்க வைத்துள்ளார். அஜய் கோஸ் வில்லனாக மிரட்டாமல் நகைச்சுவை நடிகராக சிரிக்க வைக்கிறார். வில்லத்தனமும் இன்றி, நகைச்சுவையும் இன்றி, ஜான் விஜய் மிகை நடிப்பில் வழக்கம் போல் தன் வேலையைக் காட்டுகிறார்.
கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பிளாக் காமெடி படத்திற்க்கு எற்ப வித்தியாசமான வண்ணத்தில் ஒளிப்பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டு சிறப்பாக பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, நாம் பழக்கப்பட்ட ஒரு கதைக்கருவாக இருந்தாலும், அதை வேறு விதமான கோணத்தில் சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக எடுத்துக் கொண்ட கதை பழகியது போல் தோன்றினாலும் புது விதமான கோணத்தில் சொல்லிச் சிரிக்க வைக்கும் அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
ரேட்டிங் 3/5.