
CHENNAI:
படம்: மாண்புமிகு பறை
நடிப்பு: லியோ சிவகுமார், காயத்ரி ரெமா, ஆரியன், கஜராஜ், ரமா, அசோக் ராஜா, செரண்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்கா குணசேகரன்
தயாரிப்பு: சியா ப்ரொடக்ஷன்
இசை: தேவா
ஒளிப்பதிவு: ஆர் கொளஞ்சி குமார்
இயக்கம்: எஸ் விஜயகுமார்
பிஆர்ஓ: சதீஷ் (AIM )
பறை என்னும் இசையை பற்றி தமிழகத்தில் நிறைய கருத்து பேதங்கள் உள்ளன. அந்த இசையை இசைக்கும் அனைவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் என்பதால் அந்த வகுப்பைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டுமே அந்த பறையை இசைக்குகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே உரித்தானது அது என்று பலரும் இதுவரையில் நினைத்து வந்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை விளக்கமாக சொல்ல வந்திருக்கிறது ‘மாண்புமிகு பறை” என்ற இந்தப் படம்.
இசை என்பது மக்கள் மனங்களில் இசைந்திருக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட ஓசை.அவற்றில் பல்வேறு வகைகள் இருக்கலாம்.ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.அப்படிப்பட்ட இசையுலகிலும் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை.அதில் ஓர் அரசியல் இருக்கிறது.அதன் பின்னால் ஒரு வலி இருக்கிறது.அவற்றை உடைத்தெறிந்து உலா வரும் வலிமையும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது ‘மாண்புமிகு பறை’.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் பறை இசைக்கலைஞராக நடிக்க முடியாமல் திணறியிருக்கிறார். பறை வாசிக்கும் போது, அவரிடத்தில் எந்தவித உணர்வுப்பூர்வமான அசைவுகள் இல்லா விட்டாலும் ஒரு வழியாக மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். ஒருசில காட்சிகளில் மிக நேர்த்தியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆரியனும் பறை இசைக்கலைஞர் வேடமேற்று அதற்குத் தக்கவறு நடிக்க முயன்றிருக்கிறார்.
நாயகியாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார்.ஏற்றுக் கொண்ட வேடத்தை முழுமையாக உள்வாங்கி உணர்ச்சிப்பூர்வமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோரும் குறைவின்றி நடித்து படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் விதத்தில் இருந்தாலும், பின்னணி இசையில் பறையின் பெருமிதம் தெரிகிறது.
ஆர்.கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் பறைஇசை அதிர்வுகளும் கண்களை நிறைத்து மனதிலும் நுழைகின்றன.
இயக்குநரின் இயக்குதலில் இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக இந்தப் படத்தை இயக்கியிருந்தால்… நடிகர், நடிகைகள் அனைவரையும் இன்னமும் சிறப்பாக நடிக்க வைத்திருந்தால் இத்திரைப்படம் இது போன்ற சாதிய பாகுபாட்டை குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானதாக வந்திருக்கும். பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக இப்படத்தைக் கொடுக்க முனைந்திருக்கும் அறிமுக இயக்குநர் எஸ்.விஜய்சுகுமார்,
ரேட்டிங் 3/5.