’மகாசேனா’ திரைப்பட விமர்சனம்!

110

 

 

CHENNAI:

படம் : மகா சேனா

நடிப்பு: விமல், சிருஷ்டி டாங்கே, யோகிபாபு , ஜான் விஜய்
கபீர் துஹான் சிங்,
மஹிமா குப்தா,
விஜய் சேயோன் ,
அல்ஃப்ரெட் ஜோஸ்,
சுபாங்கி ஜா,
சிவகிருஷ்ணா , இலக்கியா

தயாரிப்பு: மருதம் புரொடக்ஷன்ஸ்

இசை: ஏ.பிரவீன் குமார்
பின்னணி இசை – உதய் பிரகாஷ் யு பி ஆர்

ஒளிப்பதிவு: மனாஸ் பாபு டி ஆர்.

இயக்கம்: தினேஷ் கலைச்செல்வன்

பிஆர்ஓ: ரேகா.

குரங்கணி மலைப்பகுதியில் மலை மேல் உள்ள மக்களுக்கும் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கும் 3000 ஆண்டுகளாகப் பகைமை நிலவுகிறது.அவ்வப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுவதும் கொலை செய்வதும் நடக்கிறது. மலையின் உச்சியில் குரங்கணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் ஜென்ம பகை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அந்த மலைக்கு மேல் வசிக்கும் பழங்குடியின மக்களின் தலைவனாக விமல் இருக்கிறார். அவருடைய மனைவி சிருஷ்டி டாங்கே. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்போது அந்த யாளீஸ்வரர் கோவிலில் திருவிழாவை நடத்துவதற்காக அந்த ஊர் மக்கள் முடிவு செய்கிறார்கள்.  அவரது பகுதியின் கோவிலில் இருக்கும் யாளிஷ்வரர் சிலை மதிப்பு மிக்கது. அதைத் திருடுவதற்கு மலையின் அடிவாரத்தில்  இருக்கும் பழங்குடி இன மக்கள் முயற்சிக்கிறார்கள். இதில் இரு ஊர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.

அதேசமயம் அந்த பகுதியின் வனக் காப்பாளராக இருக்கும் ஜான் விஜய் சிலை கடத்தல் பெரும் புள்ளியான  கபீர் துகான் சிங் காட்டும் பேராசையால் பழம் பெருமை வாய்ந்த அந்த யாளீஸ்வரர் சிலையை கடத்த திட்டமிடுகிறார். தாங்களே நேரில் போய் எடுத்தால் அது திருட்டு குற்றம் ஆகிவிடும் என்பதால் அடிவாரத்து மக்களைத் தூண்டிவிட்டு அந்தக் கோவில் திருவிழாவின்போது கலவரம் செய்து இடையில் அந்த சிலையை கடத்தும்படி தூண்டுகிறார் ஜான் விஜய். இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகள் அல்லியைத் தாக்கிவிடுகிறது. யானை தாக்கியதால் அல்லி இறந்து விடுகிறாள்.கிராமமே பதறுகிறது யானையோ காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், யாளீஸ்வரர் கோவில் சிலையை  கடத்த முயன்ற வனத்துறை அதிகாரி ஜான் விஜய்  திட்டத்தை முறியடித்தாரா? உண்மையில் கோவில் திருவிழா அமைதியாக நடைபெற்றதா?..இல்லையா?.. என்பதுதான் இந்த படத்தின் மீதமான கதை.

 இப்படத்தில் மலைப்பிரதேச மக்களின் பிரதிநிதியாக செங்குட்டுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விமல். அவர்தான் ஊர் தலைவர். ஆனாலும் அந்த தலைவருக்குரிய கெத்து எதுவும் இல்லாமல் ரொம்ப ரொம்ப சாதாரணமாகவே நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான அலட்சிய உடல்மொழியைத் தாண்டி திடமான பழங்குடி இளைஞராக நடிக்க முயன்றிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வீர பெண்ணாக கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தாலும், வீரத்தை வெளிக்காட்ட வேண்டிய காட்சிகளில் அடங்கிப் போகிறார்.

யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை எடுபடவில்லை. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் கோமாளித்தனமாக நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் கதைக்களம்.மலை,மலையடிவாரம்,காடு ஆகிய இயற்கைச் சூழலை அள்ளிக் கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர்.

ஏ.பிரவீன் குமாரின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் கேட்கும் ரகம். உதய் பிரகாஷ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.திரைக்கதையுடன் இணைந்து இசைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன் இந்தப் படத்தில் மலை உச்சியில் வாழ்பவர்கள் நாகரீக மனிதர்களைப் போலவும், மலையின் அடிவாரத்தில் வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வாழ்வதாகவும் இந்தப் படத்தின் இயக்குநர் வடிவமைத்திருப்பது காமெடியாக உள்ளது. தான் சொல்ல வந்ததை தெளிவு இல்லாமல் சொல்லியிருப்பதோடு, காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் சரியான முறையில கையாள தவறியிருக்கிறார்.

ரேட்டிங் 2.5/5