
சென்னை:
படம்: ‘ரெட்ட தல’
நடிப்பு: அருண் விஜய் (இரு வேடம்), சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ்
தயாரிப்பு: பாபி பாலச்சந்திரன்
இசை: சாம் சி எஸ்
ஒளிப்பதிவு: டிஜோ தாமி
இயக்கம்: கிருஷ் திருக்குமரன்
பிஆர்ஓ: சதீஷ் (Team AIM)
அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. காளி மற்றும் உபேந்திரா என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். பாண்டிச்சேரியில் பெற்றோர் இல்லாமல் வளரும் அருண் விஜய், தன்னைப் போலவே பெற்றோர் இல்லாமல் இருக்கும் சித்தி இத்னானியை காதலிக்கிறார்.அனால் சித்தி இத்னானியோ ஒரு காலத்தில் அன்புக்கு ஏங்கியவள் , இப்போது பணம்தான் அனைத்திற்கும் பிரதானம் என்கிற மனப் போக்குடன் இருக்கிறாள்.பணம் தான் நமது காதலைத் தீர்மானிக்கும் என்கிறாள்.தன்னுடைய காதல் பிசுபிசுத்துப் போன சோகத்தில் இருந்த அருண் விஜய்யை தற்செயலாக இன்னொரு அருண் விஜய்யான உபேந்திராவை சந்திக்க நேரிடுகிறது. இருவருமே ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதால் இருவருக்கும் ஒரு குழப்பம் வருகிறது.
அந்த உபேந்திரா ஒரு பணக்காரன் என்றாலும் குற்றங்கள் பல செய்து சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறான். தோற்ற ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு காளி,உபேந்திராவாக மாறி அவனது சொத்துகளை அனுபவிக்கலாம் என்று காதலர்கள் இருவரும் திட்டமிடுகிறார்கள்.அதனால் காளி உபேந்திராவைக் கொலை செய்து விடுகிறான். காளி உபேந்திராவை கொன்று விட்ட, பிறகு யாரும் இல்லாத தனிமையில் வாழ்ந்து வந்த உபேந்திராவின் வீட்டிற்குள் காளி மற்றும் சித்தி இதானி இருவரும் செல்கின்றனர். மறுநாள் போலீஸ் உபேந்திரா வீட்டிற்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து யார் உபேந்திரா என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார் காளி. அதன் பிறகு தான் காளிக்கு தெரிய வருகிறது உபேந்திரா பரோலில் வெளிவந்த ஒரு கொலை குற்றவாளி என்று. , அதற்கு பின்புதான் காளிக்கு பல உபத்திரவங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனையில் இருந்து காளி தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘ரெட்ட தல’ படத்தின் மீதிக்கதை.
காளி மற்றும் உபேந்திரா என்ற இரு கதாபாத்திரத்தில் தனது உட்சபட்ச நடிப்பைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார் அருண் விஜய். எந்த க்தாபாத்திரத்தில் நடித்தாலும், அதில் தனக்கான முழு உழைப்பையும் கொடுப்பதில் வல்லவரான அருண் விஜய், இந்த படத்திலும் அதனை வலுவாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரத்திற்கும் நன்றாகவே வேறுபாடு காட்டியிருக்கிறார் அருண் விஜய்.
பணத்தின் மீது பேராசை கொண்ட ஒரு பெண்ணாக வரும் நாயகி சித்தி இத்நானி எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் வருகிறார் .அவர் நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.
வழக்கமான வெறுப்பேற்றும் போலீஸ்காரராக வருகிறார் ஜான்விஜய். அவர் பேசும் சில வசனங்கள் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டாமியின் ஓளிப்பதிவு படத்தின் தரத்தை அதிகரித்திருப்பதோடு, வித்தியாசமான கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் படம் முழுவதையும் ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் குரலில் “கண்ணம்மா..” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகத்தில் இருக்கிறது.. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.
சித்தி இத்னானி பெரும் பணக்காரியாக வேண்டும் என்ற அந்த ஆசைதான் காளி என்ற இளைஞரையும், உபேந்திரன் என்ற இளைஞரையும் காலி செய்கிறது என்பதை நாம் உணர்வும் வகையில் கமர்சியல் ஆக்சன் படமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் படம் ரன் வேகத்தில் பறக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது. இப்பதான் முடிந்தது என்பதுபோல நமக்கு தோன்றியது. அந்த வகையில் முதற் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் காணாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. அழுத்தமான மையக்கதையை வைத்துக் கொண்டு வெகுமக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து படத்தைக் கொடுத்திருக்கிறார்..இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.
மொத்தத்தில் இந்த ‘ரெட்டை தல’ திரைப்படம் ஆக்சன் ரசிகர்கள் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5