‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம்!

94

 

சென்னை:

படம்: தலைவர் தம்பி தலைமையில்..

நடிப்பு: ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத்

தயாரிப்பு: கண்ணன் ரவி

இணை தயாரிப்பு: தீபக் ரவி

இசை: விஷ்ணு விஜய்

ஒளிப்பதிவு: பப்லு அஜு

இயக்கம்: நிதிஷ் சகாதேவ்

பி ஆர் ஓ: சதீஷ்குமார் (S2)

பஞ்சாயத்து தலைவரான ஜீவா, ஊர் மக்களின் வாக்குகளுக்காக அவர்களது வீட்டு விசேஷங்கள் முதல் துக்கம் நிகழ்வு வரை அனைத்தையும் தலைமை ஏற்று நடத்துகிறார். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் அவர் மூத்த அரசியல்வாதிகள் செய்யும் தில்லுமுல்லுகளை பார்த்து வியந்து ,அவர்களை அறிந்து வளர்ந்து வருகிறார். அந்த ஊரில் உள்ள நல்லது கெட்டது என அவர் முன் நின்றும் நடத்தி வைக்கிறார்.அந்த கிராமத்தில் வசிக்கும் இளவரசுவின் மகள் பிரார்த்தனா நாதனின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இழுத்துப் போட்டு அனைத்து வேலைகளையும் முந்தைய நாளில் ஜீவா செய்து கொண்டிருக்கிறார். .திருமண நாளை நெருங்கும்போது அதாவது மறுநாள் திருமணம் என்கிறபோது முதல் நாள் பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவின் நோயாளித் தந்தை இறந்து விடுகிறார். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர் பக்கத்து வீட்டுக்காரர்களான இருவருக்கும் முன் பகை இருந்து வருகிறது. .மறுநாள் காலை  10:30 மணிக்குத் திருமணம் நடைபெற வேண்டும். ஆனால் திருமணம் நடைபெறும் அதே 10:30 மணிக்குத்தான் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்து ஊர்வலமாகக் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் தம்பி ராமையா. திருமண முகூர்த்தம் இறுதிச்சடங்கு ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் நடந்தாக வேண்டும் என்று இருவரும் பிடிவாதமாக இருக்கின்றனர்.அந்தப் பஞ்சாயத்தில் தலைவர் ஜீவா இந்தப் பிரச்சினைகளை எப்படிக் கையாண்டு வெற்றி பெற்றார் என்பதுதான்  ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில்  வழக்கமான கதாநாயகன் வேடமல்ல என்றாலும் படத்தின் மையத் தூணாகத் தாங்கி நிற்கிறார் ஜீவா.  ஊரில் உள்ள அனைவரிடத்திலும் அன்பாகவும், அக்கறையாகவும், நட்பாகவும் பழகும் ஒரு கலகலப்பான மற்றும் பொறுப்பான கதபாத்திரத்தில் மிக சரியாக பொருந்திப் போகும் ஜீவா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

முன் பகை கொண்ட பக்கத்துவீட்டுக்காரர்களாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோரின் கை தேர்ந்த நடிப்புத்திறன் கதாபாத்திரத்துக்கும் படத்துக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

மணமகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா நாதன்,நன்றாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி என படத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.திரைக்கதையில் அடுத்தடுத்து இவர்கள் வந்து படத்தை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்கள்.

விஷ்ணு விஜய் இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்டி இருக்கிறது.

ஒரே இரவில் நடக்கும் கதையை மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பப்லு அஜு.

கதை சில குறிப்பிட்ட இடத்தில் நிகழ்ந்தாலும் திரைக்கதையில் உள்ள சுவாரசியமும் அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்பும் அதை மறக்கடிக்கச் செய்து விடுகின்ற அளவில் காமெடியாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ்.நகைச்சுவையாகப் பல காட்சிகள் சொல்லப்பட்டிருந்தாலும் நாட்டு நடப்பினை ஆங்காங்கே பிரதிபலிக்கும் வகையில் வருகிற காட்சிகள் சிந்திக்கவும் வைக்கின்றன. எதார்த்தமான வாழ்வியல் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் நகைச்சுவையாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ கலகலப்பான காமெடி படம்.

ரேட்டிங் 3.5/5.