
நடிப்பு: கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், பி.எல். தேனப்பன், ஆனந்தராஜ் , நிழல்கள் ரவி, ராஜ் திலக், ஜி எம் சுந்தர், கருணாகரன், யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், வித்யா
தயாரிப்பு: கே. ஈ ஞானவேல் ராஜா
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
இயக்கம்: நலன் குமாரசாமி
பிஆர்ஓ: யுவராஜ்.
தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண், எம்.ஜி.ஆர் காலமான தினத்தில், அவரது அம்சத்தோடு பிறக்கும் தனது பேரன் கார்த்தியை, அவரைப் போலவே வளர்க்கிறார். ஆனால், கார்த்தி உடலால் எம்.ஜி.ஆர் ஆக இருந்தாலும், உள்ளத்தில் நம்பியார் குணம் கொண்டவராக வளர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராகும் கார்த்தி, எதை எல்லாம் செய்யக்கூடாதோ அவை அனைத்தையும் செய்வதோடு, மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யராஜுடன் இணைந்து மக்களுக்காக போராடுபவர்களை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்.
எம்.ஜி.ஆர் அம்சம் கொண்ட கார்த்தி, அவரது வழியில் பயணிக்காமல் எதிர்மறையாக பயணிப்பது ராஜ்கிரணுக்கு தெரிந்ததும், மனம் வருந்தி இறந்து விடுகிறார். தாத்தாவின் இறப்பினால் மனதளவில் பாதிக்கப்படும் கார்த்தியின் உடலில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவரை அறியாமல் அவருக்குள் எம்ஜிஆரின் உணர்வு அல்லது அருள் புகுந்து கொண்டு அவரை ஆட்டுவிக்கிறது. அதாவது மனிதர் மீது சாமி அருள் வந்து மலையேறுவது போல் இவர் மீது எம்ஜிஆர் அருள் வந்து மலையேறுகிறது. அது பல்வேறு சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் கலகலப்புகளுக்கும் திருப்பங்களுக்கும் வழிவகுக்கிறது. அதன் பின் நடப்பது என்ன என்பதே ‘வா வாத்தியார்’ படத்தின் மீதிக் கதை.
ராமேஸ்வரன்,ராமச்சந்திரன் என்று இருமுகம் காட்டும் கார்த்தி அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் எதிர்மறைக் குணச்சித்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவருக்குள் எம்ஜிஆர் விளைவு நிகழும் போது எம்ஜிஆர் தோற்றம் காட்டி, உடல் மொழி, பேச்சு எல்லாமும் மாற்றி மாறி விடுகிறார். சில நேரம் போலீசும் எம்ஜிஆரும் என மாறி மாறி முகபாவம் காட்டி நடிப்பில் புகுந்து விளையாடுகிறார். கார்த்தியின் உடல் மொழி மற்றும் நடிப்பு எம்.ஜி.ஆர்-ஐ மீண்டும் பார்த்த உணர்வை கொடுக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்திஷெட்டி கவர்ச்சிகாட்டி இளைஞர்களை ஈர்க்கிறார்.கதையில் அவருக்குப் பங்கே இல்லை என்று சொல்லமுடியாத வண்ணம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வில்லனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.அவருக்கு இந்த வேடம் அல்வா சாப்பிடுவது போல.கொடுத்த வேலையைக் குறை வைக்காமல் செய்திருக்கிறார்.
நாயகனின் தாத்தா பூமிப்பிச்சையாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார் .அவருடைய வேடம் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்மா என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். மாஸ் காட்சிகள் மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் அனைத்து காட்சிகளையும் தனது கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் மாஸாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. .ஆனாலும் பழைய பாடல்களை உரிய இடங்களில் போட்டு படத்தை வேறொரு கால வெளியில் பயணிக்க வைத்துள்ளார்.
அன்றும், இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனதில் நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கியவர் என்பதால் கதை எழுதி
ரேட்டிங் 3.5/5