’ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட விமர்சனம்!

31

 

சென்னை:

 படம்:  4த் ஃப்ளோர்  ( போர்த்  ஃப்ளோர்)

நடிப்பு : ஆரி அர்ஜுனன்,  தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், சுப்பிரமணியம் சிவா

தயாரிப்பு:A ராஜா

இசை: தரண் குமார்

ஒளிப்பதிவு: ஜெ லக்ஷ்மன்

இயக்கம்: எல் ஆர் சுந்தர பாண்டி

பிஆர்ஓ: A ராஜா.

ரணதீரன் என்கிற ஆரி அர்ஜுனன் மும்பையில் இருக்கிறார். அவரது காதலி அனுபமா என்கிற அனு அவசரமாகச் சென்னைக்கு அழைக்கிறார் . செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பார்க்கச் சொல்கிறார்.அதன்படி சென்னைக்கு வருகிறார் ஆரி. சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். நான்காவது மாடியில்  இருக்கும் வீட்டில் தங்குகிறார்  அவரை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வரவேற்கிறார்கள். தன்னை அழைத்த  காதலி அனுவை காணாததால்  அவரை தேடுகிறார் ஆரி. அப்போது அந்த குடியிருப்பில் தங்கியிருந்த பல குடும்பங்கள் மர்மமான முறையில் காணாமல் போனது தெரியவருகிறது. இந்த சூழலில் அவர் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழத் தொடங்கும் அமானுஷ்ய சம்பவங்கள் அவரை பதற்றத்துக்கும் புதிருக்கும் உள்ளாக்குகின்றன. அதே நேரத்தில், முன்னாள் காதலி காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. எதற்கும் பயப்படாமல் தனது காதலி என்னவானார், அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் என்ன? தனது காதலியை ஆரி கண்டுபிடித்தாரா? என்ற  மர்மம் நிறைந்த படம்தான் ‘ ஃபோர்த் ஃப்ளோர்’

இப்படத்தில் ரணதீரனாக ஆரி வருகிறார். அந்த ஐடி நிறுவன ஊழியருக்கான தோற்றம் உடல் மொழி பேச்சு என அச்சு அசலாகப் பொருந்துகிறார். நடிப்பிலும் ஒன்றும் குறைவில்லை. அமானுஷ்ய விசயங்களால் அச்சமடைந்தாலும், அதனுள் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதில் காட்டும் தீவிரம் என படம் முழுவதும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் ஆரி, தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறது.

பவித்ரா மர்மம் நிறைந்த காதலியாகவும், தீப்ஷிகா அண்டை வீட்டுப் பெண்ணாகவும் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

சுப்பிரமணிய சிவா வழக்கமான வில்லத்தனத்திலிருந்து மாறுபட்டு, முகபாவனைகளாலேயே மிரட்டுகிறார்.தலைவாசல் விஜய் கதையின் தீவிரத்தை உணர்த்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் தரண் குமார், பாடல்களை விட பின்னணி இசையின் மூலம் பதட்டத்தை உருவாக்க முயன்றுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண், தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நான்காவது தளத்தை காட்டி ரசிகர்களை கவர்கிறார்.

அமானுஷ்ய கதையை  செண்டிமெண்ட்  ஆக்சன்,  என கமர்சியல் அம்சங்களை கலந்து கவனச் சிதறல் இல்லாமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்தர பாண்டியன். ஆரம்பத்தில் ஒரு திகில் படமாகத் தொடங்கி, இறுதியில் அதனை ஒரு சமூகக் குற்றப் பின்னணியுடன் இணைத்துள்ளார்.

மொத்தத்தில், ‘4த் ஃப்ளோர்’ படம் பயப்பட வைக்கும்.

ரேட்டிங் 3/5