
CHENNAI:
படம் : வடம்
நடிப்பு : விமல் ,நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்
தயாரிப்பு: ராஜசேகர் ஆர்
இசை: டி இமான்
ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ் குமார்
இயக்கம்: கேந்திரன் வி
பிஆர்ஓ : சதீஷ் (S 2)
சிவகங்கை மாவடத்தில் வட மஞ்சு விரட்டு தான் பிரபலம். அந்தந்த வீடுகளில் இருக்கும் காளைகள் தான் அவர்களுக்கு பெருமை. அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து காளைகளை பராமரித்து அதனை வட மஞ்சு விரட்டுக்கு தயார் செய்து களத்தில் இறக்கி விடுவார்கள். அப்படி அந்த ஊர்ப் பெரிய மனிதராக அங்குள்ளவர்கள் மதிக்கும் உன்னதமானவராக இருப்பவர் நரேன் . உயிர்களிடத்தில் அன்பு காட்டுபவர்.சிறிதும் கருணை இல்லாமல் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தனது கோசாலையில் வைத்துப் பராமரித்து வருபவர்.அவரது மகன் விமலும் தந்தையைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவர்.அப்படி வேகமாக ஓட முடியாததால் கைவிடப்பட்ட கன்றுக் குட்டியைத் தனது வீட்டில் வளர்த்து பயிற்சி அளித்து பெரிய போட்டிக் காளையாக உருவாக்குகிறார். ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வரும் விமலை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்க முயலும் எதிரிகள், வீட்டுக்குள்ளே கூட அவரை கொல்லத் திட்டமிடும் மனிதர்கள் என பல திசைகளில் இருந்து பகைமைகள் எழுகிறது.
இப்படி பலரிடம் பகைமை வளர்த்திருக்கும் காரணத்தால் தன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மறந்து சோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் விமல், இழந்த மகிழ்ச்சியை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் திரும்ப கொடுக்கிறது. ஒருநாள் இரவு, தனிமையில் பேச விமலை அழைக்கிறார் சனஷ்கா ஸ்ரீ. அப்போது லோக்கல் ரெளடியான மதூசூதனின் தம்பி, விமலை கொல்ல வருகிறார். அப்போது, வரும் ரெளடிகள் அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் விமல். தனது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்க முடிவு செய்யும் விமலுக்கு, அவரது காதலி சனஷ்கா பெரிய அளவில் அதிர்ச்சி கொடுக்கிறார். அந்த அதிர்ச்சியினால் துவண்டு போகும் விமலின் நிலைமை என்ன ஆனது? விமலின் காதல் வெற்றி பெற்றதா? என்பதுதான் “வடம்” படத்தின் மீதிக் கதை.
மாடுபிடிவீரராக நடிப்பதற்குத்தான் நிறைய மெனக்கெட வேண்டும் மாடுவளர்க்கும் வீரர் என்பதால் தம் இயல்புக்கு மாறாமல் நடித்திருக்கிறார் விமல்.காதலியின் வருகையில் மகிழ்ச்சியும் அதன்பின் ஏற்படும் அதிர்ச்சியும் அவர் நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது.முறுக்குமீசை தோற்றம் அவருக்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சனஷ்காஸ்ரீ, அழகான புதுவரவு.முதல்படத்திலேயே கனமான வேடம்.அதற்குத்தக்க நடித்துமிருக்கிறார்.அவருக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
எதிர்நாயகனாக நடித்திருக்கும் நட்டி, அதற்கு எப்போதுமே பொருத்தமானவர்தான்.இந்தப்படத்தி
முனீஷ்காந்த்துக்கு இந்தப்படத்தில் மிக முக்கிய வேடம்.அதில் சரியாக நடித்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.
விமலின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன்,அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி,அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், பகையாளியாக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் ஆகிய அனைவரும் அசல் கிராமத்து மனிதர்களாகவே நடமாடியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி களத்தையும், போட்டியை அனைவரும் ரசிக்கும்படி யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் டி. இமான் வழங்கிய பாடல்கள் அவரது பழைய படைப்புகளின் சாயலை நினைவூட்டினாலும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையின் சத்தம் காதை பதம் பார்த்துவிட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியிலிருந்து வேறுபட்டு வடமாடு போட்டிக் களத்தை புதிய வடிவத்தில் கதையை எழுதி இயக்கியிருக்கும் கேந்திரன்.வி, தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத ஒரு உன்னதமாக திரைக்கதை அமைத்து கதாநாயகனை சுற்றி நடக்கும் பகையை மையமாக வைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘வடம்’ அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்.
ரேட்டிங் 3/5.