‘பெத்தி’ திரைப்பட விமர்சனம்!

31

 

CHENNAI:

படம்: பெத்தி

நடிப்பு : ராம்சரண்  ஜான்வி கபூர் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு,,  திவ்யேந்து சர்மா, பொமன் இராணி

தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு

இசை: : A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: : R. ரத்னவேலு

இயக்கம்: புச்சி பாபு சனா

பிஆர்ஓ : யுவராஜ்.

ஊர் பெயர் இல்லாமல் அரசாங்கத்தின் எந்தவிதமும் உதவி பெறாமல் மற்றும் எந்த அடையாளம் இல்லாமல்   மலை அடிவாரத்தில் ஒரு துடிப்பான வீரமுள்ள இளைஞனாக வாழ்ந்து வரும் கதாநாயகன் தான் ராம்சரண்  முதலில் கிரிக்கெட் வீரராக தன் கிராமத்து சுற்றி உள்ள மற்ற கிராமங்கள் ஏலத்தில் எடுக்கும் ஒரு கிரிக்கெட்  வீரராக களம் காண்பார். தன் கிராமத்தில் மக்கள் வாழும் இடத்தில் எந்தவிதமான போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் அங்கு ஒரே ஒரு இரும்பு பாதை மட்டுமே உள்ளது அங்கு வந்து போக சொல்லும் ரயில் மட்டும் உள்ளது அதுவும் நிற்காது, அதை எப்படியாவது என் மக்களுக்காக அங்கு ஒரு நிறுத்தம் வைக்கப்பட வேண்டும் என்று மலை வாழ் மக்கள் போராட்டம் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் ராம்சரண் எப்படி அங்கு ரயில் நிலையத்தை கொண்டு வந்தார் என்பதுதான் இந்த ‘பெத்தி’ படத்தின் கதைக் களம்.

கிரிக்கெட்டர், மல்யுத்த வீரர்,  மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரர் என மூன்று விளையாட்டு வீரர் வேடத்தில் நடித்திருக்கிறார். ராம் சரண்.  அவர் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று சொல்வதை விட மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார் என்று தான்  சொல்ல வேண்டும்.   மாற்றுத்திறனாளியாக ராம்சரண் ஓட்டப்பந்தய களத்தில் நடத்தும் சாகசம்  அபாரம்.

கதாநாயகியாக நம்ம ஊர் ஶ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடித்திருக்கிறார்.பாடல்களில் குத்தாட்டம், காட்சிகளில் கவர்ச்சி என முழுமையான மசாலா படங்களில் நாயகிகளுக்கு  அதிகமான காட்சிகள் கொடுப்பதில்லை. ஆனாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

சிவராஜ்குமார் நடித்த கௌர் நாயுடு, படத்தின் மிக முக்கியமான தூணாக இருக்கிறார். அவரது அனுபவமும் திரை ஆளுமையும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. குஸ்தி களத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை போராட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை அவரது பாத்திரம் வலுவாக அமைந்து இருக்கிறது.

ஜெகபதி பாபு தன் அனுபவ நடிப்பால் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.திவ்யேந்து சர்மா,பொமன் இராணி ஆகியோருடைய வேடங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் ரசிக்கத்தக்க விதத்தில் இருக்கிறது.

ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதையில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட்,குஸ்தி,ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளை அதனதன் நேர்த்தியோடு படமாக்கியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கின்றன. வழக்கம்போல்,தன் பின்னணி இசையால் காட்சிகளுக்கு ஏற்றவாறு மெருகேற்றி இருக்கிறார்.

இயக்குனர் புச்சி பாபு சனா விளையாட்டை மையமாக வைத்து இப்படி  ஒரு பார்முலாவை உருவாக்கி கமர்சியல் படத்தை கொடுக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். காதல், பாடல்கள், நகைச்சுவை என பல பகுதிகள் நீளமாக இருப்பதாலும் திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதாலும் சில காட்சிகளை குறைத்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். இந்தியாவில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களும் இருக்கின்றன என்பதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.

மொத்தத்தில், ‘பெத்தி’   ஒரு  ஒரு சமூக சிந்தனை கொண்ட படம்.

ரேட்டிங் 3.5/5.