ஏன் என்னை ஏதோ செய்தாய் -திரை விமர்சனம்

28

 

சிறு வயதிலேயே தாயை இழந்த நாயகனுக்கு தந்தையின் அரவணைப்பும் கிடைக்கப் பெறாமல் போக, தனிமையின் கொடூரம் அவனை ரொம்பவே ஆட்டிப் படைக்கிறது.
வளர்ந்து வாலிபன் ஆன நிலையில் மதுவுக்கு அடிமை. கூடவே புகையும் இணைந்து கொள்ள… தன் பிரியத்துக்குரிய இரு நண்பர்களுடனான நட்பு பகல் பொழுதை பங்கம் இல்லாமல் வைத்துக்கொள்ள, இரவோ மது வாசனையில் தூக்கம். ஒரு கட்டத்தில் மாதுவும் தேவைப்பட… அப்படி அழைக்கப்பட்டு ஒரு நாள் இரவு அவனைத் தேடி வந்த மதுமிதா, அடுத்தடுத்த சந்திப்புகளில் அவன் நேசத்திற்கு
உரியவள்
ஆகிறாள். அவன் விரும்பும் மதுவுக்கும் மேலாகிறாள் இந்த மதுமிதா.
தன்னை பாலியல் தொழிலாளி எந்த கோணத்தில் நோக்காமல் தன்மீது உண்மை அன்பு செலுத்தும் நாயகனை மதுமிதாவுக்கும் பிடித்துப் போக…
அப்புறம் என்ன…
ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள்.
இந்த
இடைப்பட்ட நாட்களுக்குள் மதுமிதாவின் 10 வயது பெண் குழந்தை வெளியூர் ஹாஸ்டலில் தங்கி படிப்பது வரை அவனுடன் மனம் விட்டு பேசுகிறாள் மதுமிதா.
அப்படியே அவனையும் ஹாஸ்டலுக்கு அழைத்து போய் மகளை அறிமுகப்படுத்து
கிறாள்.
இதுவரை எல்லாம் நன்றாக போய்க்கொண்டி
ருக்க, நாயகனின் மது பழக்கம் ஒரு இரவில் அவர்களுக்குள் முட்டல் மோதலை ஏற்படுத்தி விடுகிறது.
மதுமிதா பிரிந்து போகிறாள். தவறை உணர்ந்தவன் அவளை கண்டுபிடித்து மறுபடியும் அழைத்து வந்தானா… அல்லது போனவள் போனவள் தானா? என்பதற்கு விடை சொல்கிறது, எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட கிளைமாக்ஸ்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி, நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ், இருவரும் அறிமுக நட்சத்திரங்கள் போல் எந்த இடத்திலும் தோன்றவில்லை. முதல் படத்திலேயே அழுத்தமான தங்கள் கதாபாத்திரங்களை நடிப்பால்
இலகுவாக்கி விடுகிறார்கள். எந்த ஒரு இடத்திலும் நடிப்பில்
மிகையில்லை.
ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி இன்ன பிற நட்சத்திரங்களாக கதை ஓட்டத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானியின் கேமரா காட்சிகளை இயல்பாக காட்சிப்படுத்தியி
ருக்க, ஜெய்கர் ஹரிநாத் –அசோக் ஸ்ரீதரன் இசையில் பாடல்கள் அனைத்தும் மடை திறந்த வெள்ளமாய் மனதோடு ஐக்கியம்.
. ஜோயி ரெடாவின் பின்னணி இசை இயக்குனர் சொன்னது போக மீதிக்கதையை சொல்லிவிடுகிறது.
எழுதி இயக்கி, படத்தொகுப்பு செய்து நாயகனாகவும் நடித்திருக்கும் டி.ஆண்டனி, எளிமையான காதல் கதையை, நேர்மையாக சொல்வதில் வெற்றி பெற்று இருக்கிறார். பாலியல் தொழிலாளியாக அறிமுகமாகி நாயகன் மனதில் படிப்படியாக இடம் பிடிக்கும் அந்த மதுமிதா கேரக்டர் நிச்சயம் ரசிகர்களை ஏதோ செய்யும். காதல் உணர்வும், காதலர்களின் உணர்ச்சிகளும் எளிமையாக அதே நேரம் வலிமையாக சொல்லப்பட்டிருப்பது திரைக்கதைக்கான சிறப்பு.
நாயகனுக்கு அமையும் நண்பர்கள் இந்த படத்தில் இதுதான் நட்பு என்று சொல்லிப் போகிறார்கள்.
இயக்குனரே எடிட்டரும் என்பதை படத்தின் நீளம் சொல்லாமல் சொல்லி விடுகிறது. தமிழ் தெரியாத நாயகி என்பதால் கொஞ்சம் வங்காளம் நிறைய ஆங்கிலம் எப்பவாச்சும் தமிழ் என்று நாயகியை வைத்திருப்பது கூட அழகாக இருக்கிறது.
பாலியல் தொழிலாளி உடனான காதல் என்ற மாற்றுச் சிந்தனையோடு களம் இறங்கிய இயக்குனரின் சிந்தனை நிச்சயம் புதுசு. பாலியல் தொழிலாளியின் பெண் தொடர்பான அந்த கிளைமாக்ஸ் நிச்சயம் ரசிகர்களின் கரகோஷத்துக்குரி
யது.
பிளஸ்: சொல்ல வந்த கதையை முடிந்தவரை நேர்மையாக சொன்ன இயக்கம்.

பிளாஷ்: நாயகனின் நண்பர்கள் தொடர்பான காட்சிகள்.

ரேட்டிங்: 3/5