
எங்களுக்கு மது வேண்டாம். மகிழ்ச்சியாக வாழ விடுங்கள். அது போதும் என்று சொல்கிறார்கள், அந்த ஊர் மக்கள்.
என்ன மக்களே இது… மது வேண்டாம் என்று சொல்லும் சொல்பவர்களும்
இருக்கிறார்களா என்ன?
அது எந்த ஊரில்?
இந்த படத்தில் காட்டப்படும் ஊரில் இருக்கிறார்கள்.
இவர்களில் பாதி பேர் அதுவரை மது போதையில் மூழ்கி அதுவே சுகம் என மதுவை கொண்டாடி தீர்த்தவர்கள் என்பது தான் இந்த கதைக்குள் நுழைந்த ஆச்சரியம்.
அரசு கஜானாவை பெருமளவில் நிரப்ப வேண்டும் என்பதற்காக அரசாங்கமே மது விற்பனை செய்கிறது. தங்கள்
ஆரோக்கியம் பற்றி கவலைப்படாமல் அற்ப
மகிழ்ச்சிக்காக மக்களும் மதுக் கோப்பையை கையில் ஏந்துகிறார்கள். கதையில் வரும் நாயகன் கூட இந்த ரகம் தான். டாஸ்மாக் பார் வைத்து நடத்துவதோடு முழு குடிகாரனாக இருக்கிறார். தனது நண்பர்களும் குடித்து வெறித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போட வேண்டும் என்பதற்காக மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் ஒன்றையும் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். நட்பு வட்டத்தில் யாருக்கு மது கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு வாங்கி கொடுக்கும் வரை ஓய மாட்டார் .
இப்படிப்பட்ட நாயகனுக்கு மருத்துவம் படிக்கும் ஒரு காதலி உண்டு. அந்த காதலியும் மது வேண்டாம் என்று அன்பாக சொல்லி பார்க்கிறார். நாயகன் முழு குடிகாரன் என்பதற்காகவே நாயகி குடும்பம் இந்த காதலை எதிர்க்கிறது. நாயகியோ, மதுவில் முழு நேரம் மூழ்கினாலும் அவரே என் வருங்கால மணாளன் என்கிறார்.
இந்த நேரத்தில்
அரசாங்கமே திடீர் முடிவெடுத்து மதுவிலக்கை அமல்படுத்துகிறது.
இதனால் அதுவரை குடித்து கும்மாளம் இட்டவர்கள் கள்ளச்சராயத்துக்கும்வழியின்றி கொந்தளித்து போகிறார்கள்.
நமது நாயகன் சும்மா இருப்பாரா… இங்கிருக்கும் வெளிநாட்டுக்காரர்கள் உதவியுடன் மதுவை தயாரிக்க முடிவு செய்கிறார்.
ஆனால் அந்த முயற்சி சொதப்பலில்
முடிய, இப்போது
மதுப் பிரியர்கள் மதுவை மறந்தே ஆக வேண்டிய கட்டாயம். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் மதுவை மறந்து வாழும் அளவுக்கு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளும் நேரத்தில் நிதி நிலையை சீராக்க மறுபடியும் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்கிறது.
அரசின் இந்த முடிவு அந்த ஊர் மக்களை நியாயப்படி சந்தோஷப்படுத்தித் தானே இருக்க வேண்டும். ஆனால் அந்த மக்கள் வேறு ஒரு முடிவு எடுக்கிறார்கள் அது என்ன என்பது கொஞ்சமும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ் எந்நேரமும் மது போதையில் இருக்கும் நடிப்பில் சுலபமாக தேறி விடுகிறார். தன்னைத் திருத்த முயலும் காதலியிடம் முதலில் மது. அதன் பிறகு மாது என்ற தனது கொள்கையை தெள்ளத் தெளிவாக சொல்லி விடுகிறார். காதலியும் அவர் குடும்பமும் அதற்காக வருத்தப்பட்டார்களா என்று சிந்திக்கிற நிலையில் கூட அவர் இல்லை என்கிற அவர் இல்லை. இப்படி ஒரு கேரக்டரில் அதுவும் முதல் படத்திலேயே ஏற்றதற்காகவே நாயகனுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.
நாயகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, ஒரு குடிகாரனை விரட்டிக் விரட்டிக் காதலிப்பது, கல்யாணத்துக்கு பிறகு அவரை திருத்துவேன் என்று பெற்றோரிடம் சொல்வது என இயக்குனர் சொன்ன வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக வரும் கல்கிராஜா சிரிக்க வைக்கிறார். முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மொட்ட ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி ஆகியோரும் இருக்கிறார்கள்.
மனைவி செத்துப் போன நிலையிலும் தன்னை உணராத போதை நாயகனாக வரும் ஆனந்தகுமார் நிஜமாகவே நடிப்பில் அமர்க்களம் செய்திருக்கிறார். மதுவை மறந்து மகளை தேடி தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்து
அவமானப்படும்
இட த்திலும் நடிப்பில் ஸ்டெடியாக இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ்,பாடல் காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.
சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் மனதில் பதிந்த ராகங்கள் வரிசையில் இடம் பிடித்து விடுகின்றன.
பின்னணி இசையிலும் ஓகே.
மக்களை எப்படியாவது மதுவின் பிடியிலிருந்து மீட்டெடுத்து விட வேண்டுமென்கிற தவிப்பில் இப்படத்தின் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.சி.
மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்
பட்ட பின்னர் வரும் காட்சிகளும் அதில் நடித்தவர்களின் நடிப்பும் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடுகிறது.
உருவாக்கத்தில்
சிற்சில குறைகள் இருந்தாலும் கூட, மது இல்லாத நாடு எப்படி இருக்கும் என்கிற இயக்குநரின் நல்லெண்ணம்
படத்தின் உயர்ந்த நோக்கத்தை நமக்கு புரிய வைத்து விடுகிறது.
பிளஸ்: மது இல்லாத நாடு என்ற இயக்குனரின் உயரிய சிந்தனை கதைக்களம் ஆகி இருப்பது.
மைனஸ்: ஏனோ தானோ என்று எழுதப்பட்ட நாயகி கேரக்டர்.
ரேட்டிங்: 3/5.