மீசைய முறுக்கு -திரை விமர்சனம்

9

 

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, அந்த கலையை குறுகிய வட்டத்திற்குள் இருந்து எல்லாருக்கு
மாய் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். மற்ற இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு கானா பாடகர்களுக்கு சற்று எட்டத்திலேயே இருக்கிறது.
அவரது மகனும் அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத்துறையில் சாதிக்க நினைக்கிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழ்நிலை அவரது கானா கனவை காணாதே ஆக்கி விட ..
மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் ஹிப் ஹாப் ஆதி, தனது தாத்தா மற்றும் அப்பா போல் தோல்வி அடைந்தாரா ? அல்லது இசைத்துறையில் சாதித்தாரா? என்பதை நெஞ்சம் நிறைய இசை நிரப்பி தந்திருக்கிறார்கள்

ஹிப்ஹாப் ஆதி வழக்கம் போல் தன் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் அறிவுரை சொல்வதோடு, அவர்களை ஜாலியாக வைப் பண்ண வைக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். ஆட்டம், பாட்டம் என்று படம் முழுக்க கொண்டாட்ட மனநிலையோடு வலம் வரும் ஆதி, கானாவுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்
கான புரட்சியையும் செய்து இசை ரசிகர்கள் மனதுக்குள் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார்.

சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என கதையின் மூன்று காலகட்டத்துக்கும் மூன்று நாயகிகள். குறை இல்லாத நடிப்பு இவர்களுடையது.

ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்சத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியத்தின் கேமரா கதை நிகழும் மூன்று காலக்கட்டங்களின் வேறுபாடுகளையும் துல்லியமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது.
எழுதி இயக்கி இசையமைத்திருக்
கும் ஹிப்ஹாப் ஆதி, முதல் பாகத்தின் அதே மையக்கருவை ஒரு கையிலும், மறு கையில் சென்னை கானா கலைஞர் ளுக்கான அங்கீகாரம் என்ற பதாகையை இன்னொரு கையிலுமாக ஏந்தி ஜென்சி தலைமுறை ரசிகர்களிடம் கூடு விட்டுக் கூடு பாய்ந்து lஇருக்கிறார்.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடல்கள் மற்றும் காட்சிகளை சரியான முறையில் வடிவமைத்து திரையரங்கையே அழகான படுத்தி இருக்கிறார. ருக்கிறார்

திரைப்படம் என்றாலே ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆதியின் லாஜிக்கிற்கு ஏற்றவாறு படம் இருந்தாலும், முதல் பாகத்தைப் போலவே திரைக்கதை பயணிப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதே சமயம், இத்தகைய ஏமாற்றங்களை மறந்து படத்தை கொண்டா வைக்கும் பல விசயங்களை வைத்து தனது தம்பிகள் மற்றும் தங்கைகளை திருப்திப்படுத்தும் ஆதி மீண்டும் ஒரு முறை ஜெயித்து மீசைய முறுக்கியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘மீசைய முறுக்கு 2’ அதே தான்.

ரேட்டிங் 3/5