
அந்த மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, அதிகபட்ச மாணவர்களின் சேர்க்கையால் வேறு வழி இன்றி 15 வருடங்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது. அங்குள்ள நாலாவது மாடியில் உள்ள 418-ம் எண் கொண்ட
அறை தான் 15 வருடங்களாக அந்த அந்த விடுதி மூடிக் கிடக்கவே காரணம்.
அந்த அறைக்குள் அப்படி என்ன ரகசியம் புதைந்து கிடைக்கிறது? ஆவியின் அச்சுறுத்தலா? கேள்விக்கு திகில் பின்னணியில் விடை தந்து இருக்கிறார்கள்.
டாக்டராகும் கனவில் அந்த மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர் விவேக்குக்கு அந்த விடுதியில் அறை எண் 417 ஒதுக்கப்படுகிறது. அடுத்த அறை 418. ஒரு நாள் தவறுதலாக
விவேக் அந்த அறையை திறக்க முற்பட… அதன் பிறகு அவரை சுற்றி நிகழும் சம்பவங்கள் கனவு
வரையிலும் அவரை விடாமல் துரத்துகிறது.
அறிவியல் அவருக்கு மனப்பிரம்மை என முத்திரை குத்துகிறது. அவரை பரிசோதிக்கும் மனநல மருத்துவரோ ஒரு கட்டத்தில்அந்த அறைக்குள் புதைந்து கிடக்கும் ஆவி மர்மம் குறித்து வாய் திறக்கிறார். ஒரு தாய்மையின் சோகம் பழிவாங்கலாக மாறிய அவலம் பிளாஷ்பேக்காக விரிய…
முடிவு, நெஞ்சை உறைய வைக்கும் ரத்தமும் சதையுமான கிளைமாக்ஸ்.
அமானுஷ்ய பின்னணியில் சிக்கித் தவிக்கும்
மருத்துவக் கல்லூரி மாணவராக சூர்யா ராஜ் வீரபதினி, நிஜத்துக்கும் மாயத் தோற்றங்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளைஞனின் மனநிலையை நமக்குள்ளும் பதற்றம் பற்றிக் கொள்ளும் அளவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கு நேர்ந்த ஆவி அனுபவத்தை மற்ற மாணவர்கள் கிண்டல் அடிக்க, அவர் செய்வதறியாமல் திகைக்கும் இடம் அத்தனையும் அவர் நடிப்புக்கான மதிப்பெண்கள்.
தேவிகா கதாபாத்திரத்தில் வரும்
சைத்ரா ஆச்சார், தனது தோற்றம், உடல்மொழி மூலம் திகில் உணர்வை ஏற்படுத்துகிறார். குறிப்பாக, அமானுஷ்யத் தன்மை கொண்ட காட்சிகளில் அவரது நடிப்பு நிஜமாகவே பயமுறுத்தி வைக்கிறது. தாய்மை அடைய முடியாத ஏக்கம் நீடிக்கும் நிலையில் அதுவே வெறித்தனமான உயிர் விளையாட்டுகளுக்
குள் அவரை கொண்டு போய் நிறுத்தும் இடங்களில் எப்பேர்ப்பட்ட நடிகை இவர் என்று வியக்க வைக்கிறார் .
சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகடாலா, ரமேஷ் இந்திரா உள்ளிட்ட மற்ற நடிகர்களும்
கதைக்களத்தில் தங்கள் பொருத்தமான பங்களிப்பை நிறைவே நிறைவேற்றுகிறார்
கள்.
அலட்சிய மனோபாவத்துடன்
கல்லூரி மாணவியாக வரும்
பிரீத்தி பகதாலா நடை உடை பாவனைகளில்
ஈர்க்கிறார்.
தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு , வெங்கியின் இசை , அகுல் அவினாஷின் படத் தொகுப்பு, அனுபமின்
ஒலி வடிவமைப்பு இந்த திகில்
படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்.
கீர்த்தன் நட கவுடா இயக்கி இருக்கிறார். குழந்தை ஆசைக்காக தீய சக்தி தூண்டுதலில் கொலைகள் வரை போகும் ஒரு பெண்ணின் கதையை முடிந்த வரை திகிலும் திரில்லருமாக தந்திருக்கிறார்.
ரேட்டிங்: 3/5