Charles enterprises

177
நடிகை ஊர்வசி நடிப்பில் சார்லி எண்டர்பிரைஸ்
இந்த கதையினை இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியுள்ளார்.
கணவரை பிரிந்து தனியே வந்த கோமதி ( ஊர்வசி ) தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவருகிறார், கோமதியின் மகன் ரவிக்கு கண்ணில் ஒரு பிரச்சனை இருக்கிறது, அவருக்கு தனியாக தோழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. கோமதிக்கு தெய்வபக்தி அதிகம் அதனால் அவரின் வீட்டில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டுவருகிறார்.
கோமதி வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையை பர்வதம் என்ற பெண் பணத்திற்கு கேட்கிறார் , எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ரவியிடம் சொல்கிறார், ஆனால் கோமதிக்கு இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கடைசியில் ரவி விநாயகர் சிலையை விற்று கண் பிரச்சனையை தீர்த்து , தொழில் தொடங்கினாரா ? இல்லையா ? அல்லது கோமதி அந்த சிலையை வைத்து கோவில் கட்டினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
நடிகை ஊர்வசி பெரிய இடைவெளிக்கு பிறகு சோலோ  பெர்பாமன்ஸ் பண்ணி உள்ளார். கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
எதார்த்தமான நடிப்பு.
இசை நன்றாக உள்ளது பாடல்கள் பெரிதாக இல்லை.
பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது.
கலையரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மிக நன்றாக உள்ளது திரைக்கதை. ஒளிப்பதிவு பிரமாதம்.
மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.