
CHENNAI:
நடிகர் & நடிகைகள் :- துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, மாஸ்டர் ரித்திக், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வெங்கி அட்லூரி.
ஒளிப்பதிவாளர் :- நிமிஷ் ரவி.
படத்தொகுப்பாளர் :- நவின் நூலி.
இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்.
தயாரிப்பாளர்கள் :- சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா.
மதுரா வங்கியில் கேசியராக வேலை பார்க்கும் கதாநாயகன் துல்கர் சல்மான், மிகப்பெரிய அளவில் பொருளாதார பிரச்சனையில் பலரிடம் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறார். தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் கதாநாயகன் துல்கர் சல்மான், மற்றும் கதாநாயகி மீனாட்சி சவுத்ரி பலரிடமும் பல இடங்களிலும் அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது இதனால், நேர்மையாக இருந்த கதாநாயகன் துல்கர் சல்மான் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, தவறு செய்தாலும் பரவாயில்லை நமக்கு பணம் தான் முக்கியம் என நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மானின் முடிவு அவரை எங்கு அழைத்துச் செல்கிறது, அவர் பல பிரச்சினைகளில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அவர் நிறைய பணம் சம்பாதித்தாரா? நிறைய பணம் சம்பாதிக்க வில்லையா? சம்பாதித்து மிகப்பெரிய மிகப்பெரிய பணக்கார ஆனாரா? என்பதுதான் இந்த ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வேறு யாருக்கும் கிடைத்து விட்டதால் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில், வங்கி மேளாளரிடம் கோபப்பட்டு, பிறகு அவரிடமே அழுது கெஞ்சும் காட்சியிலும் சரி, அந்த சூழலை அடுத்த சில நிமிடங்களில் மறந்துவிட்டு சாதாரண நிலைக்கு திரும்பும் போது சரி, மொத்த திரைப்படத்தையும் தனது நடிப்பு மூலம் தாங்கிப் பிடித்திருக்கிறார். வங்கியில் காசாளர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான், நடுத்தர குடும்பத் தலைவன் கதாபத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். கதாநாயகன் துல்கர் சல்மானின் மனைவியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி மீனாட்சி செளத்ரி, நடுத்தர குடும்பத்தின் குடும்ப தலைவியாக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் துல்கர் சல்மான் கதாநாயகி மீனாட்சி சௌத்ரி இவர்களின் மகனாக நடித்த மாஸ்டர் ரித்விக் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம்கி கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் அளவாகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, தனது கேமரா மூலம் 1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்று இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நடக்கும் மோசடி மற்றும் பங்குச் சந்தை மோசடியின் பின்னணியில் இந்திய நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் மனநிலையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி மிகவும் அருமையாக இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
ரேட்டிங் 2.5/5