‘தக் லைப்’ சினிமா விமர்சனம்!

108

 

சென்னை:

படம்: தக் லைஃப்

நடிப்பு: கமல்ஹாசன், எஸ் டி ஆர், திரிஷா, நாசர் , அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சு ரேக்கர், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், சேத்தன்

தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ்,

இசை: ஏ ஆர் ரகுமான்

ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்

இயக்கம்: மணிரத்தினம்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் நிறுவனம்

பிஆர்ஓ: டைமண்ட் பாபு, சதீஷ் S2

கமல்ஹாசன், மணிரத்தினம் இணைந்து வழங்கிய நாயகன் வெற்றிப் படத்துக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையாதா என்று ரசிகர்களும், எதிர்பார்த்து காத்திருந்தனர்.. காத்திருப்பு வீண் போகாமல் இத்தனை வருடங்களுக்கு பிறகு தற்போது கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணி தக் லைஃப் படம் மூலம் இணைந்திருக்கிறது.
படம் எப்படி இருக்கிறது என்று ஒரு வரியில் கூறி விட கூட முடியாது. காரணம் இதில் இன்னொரு இளம் ஹீரோவும் இணைந்திருக்கிறார் அவர் வேறு யாருமல்ல அட் மேன் எஸ் டி ஆர்.
கமலுடன் மற்றொரு ஹீரோ இணைந்து நடித்தால் அந்த ஹீரோ கமலுக்கு சமமாக நடிக்க முடியுமா என்ற கேள்வி இருக்கும். ஆனால் அந்த கேள்விக்கு என்னால் முடியும் என்று பதில் தந்திருக்கிறார் எஸ் டி ஆர்.

படத்தின் கதை என்று பார்த்தால் கேங்ஸ்டர் கதை தான்.
சக்திவேல் (கமல்ஹாசன்) ஒரு தாதா. அவருக்கு எதிராக மற்றொரு தாதா கூட்டம். இந்த இரண்டு கூட்டத்துக்கும் இடையே நடக்கும் மோதலால் சிறுவயதிலேயே தனது தந்தையை இழக்கிறார் அமரன் ( எஸ் டி ஆர்). இந்த கலேபரத்தில் அமரனை காப்பாற்றும் சக்திவேல், தன்னுடனே வைத்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் சக்திவேல் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது தாதா கூட்டத்தின் பொறுப்பை அமரனிடம் ஒப்படைக்கிறார்
சக்தி. இதற்கிடையில் தன் தந்தையை சக்திதான் சுட்டுக் கொன்றார் என்று தகவல் கிடைக்கவே அவரை தீர்த்தக்கட்ட அமரன் திட்டமிடுகிறான். இதில் நடக்கும் மோதலில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து முடிகிறது.

உலகநாயகன் கமலஹாசன் இந்த படத்தின் மூலம் விண்வெளி நாயகனாக உயர்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த வயதிலும் இப்படி ஒரு நடிப்பா என்று ஒவ்வொரு காட்சிக்கும் ஆச்சரியக்குறி ஏற்படுத்துகிறார்.
ஆக்சன் காட்சிகளில் காட்டியிருக்கும் அதிரடியில் இவருக்கு எங்கெல்லாம் எலும்பு உடைந்திருக்கும் என்று பயம் ஏற்படுகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கிளைமாக்சில் கமலுக்கும், எஸ் டி ஆர் கும் நடக்கும் மோதல் படு பயங்கரம். கண் மண் தெரியாமல் அடித்துக் கொண்டு கட்டாந்தரையில் விழுகிறார்கள். இதில் எஸ் டி ஆருக்கும் எந்த இடத்தில் அடிபட்டுருக்கிறது என்று கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக நாயகனுடன் நடிக்கிறோம் என்ற எந்த பயமும் இல்லாமல் அமரன் என்ற கதாபாத்திரத்திற்குள் தன்னை புதைத்துக் கொண்டு சக்திவேல் தாதாவுடன் மோதுகிறோம் என்ற ஒரு உணர்விலேயே எஸ் டி ஆர் நடித்திருப்பதால் தான் இந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

திரிஷா ஒரு அனாதை பெண்ணாக வந்து முதலில் கமலுக்கு ஜோடியாக இருக்கிறார் பின்னர் அவரை தனக்கு ஜோடியாக்கிக் கொள்கிறார் எஸ் டி ஆர். அது எப்படி? படத்தில் பாருங்கள்..

கமல் , எஸ் டி ஆர், திரிஷா உடன் அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, ,ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சு ரேக்கர், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், சேத்தன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

வெறும் தாதா கதையாக மட்டுமல்லாமல் அண்ணன் ,-தங்கை பாசம், கணவன் -மனைவி அன்பு என்று ஒரு குடும்ப உறவையும் இணைத்திருப்பது இயக்குனர் மணிரத்தினத்தின் சென்டிமென்ட் டெக்னிக். அது ஒவ்வொரு படத்திலும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது, இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆகிறது.

ஏ ஆர் ரகுமான் இசையில் புயல் கிளப்பி இருக்கிறார். ஜிங்குஜா ஒரு பாடலே போதும் இன்னொரு பாடல் வேண்டும் என்று கேட்க முடியாத அளவிற்கு வெளுத்துக்கட்டியிருக்கிறார். இதில் கமல் எஸ் டி ஆர் ஆடும்போது ரசிகர்கள் கரகோஷம் அரங்கைபிளக்கிறது.

ரவி கே சந்திரன் கேமரா ஹாலிவுட் படங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு காட்சிகளை பதிவு செய்திருக்கிறது. ஹிமாலயா செல்லும் காட்சி நம்மை அந்தரத்தில் தூக்கிச் சென்று பனி சிகரங்களுக்கு இடையே இறக்கி விடுகிறது.
இது அந்த படம் போல் இருக்கிறது , அந்த படம் இந்த படம் போலிருக்கிறது என்று விமர்சனங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த விமர்சனம் வந்தாலும் இந்த படம் மணிரத்தினம், கமல்ஹாசன், எஸ் டி ஆர், ஏ ஆர் ரகுமான் என்ற கூட்டணியில் வந்திருக்கும் ஒரே படம் என்பது ஸ்பெஷல்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது.

தக் லைஃப் – தமிழ் சினிமாவின் புதிய பரிணாமம்.

 

ரேட்டிங் 3.5/5