
CHENNAI:
படம்: நூறு சாமி
நடிப்பு: விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர்.
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி
இசை: பாலாஜி ஸ்ரீராம்
ஒளிப்பதிவு: எஸ் பி தர்ஷன் கிர்லோஸ்
இயக்கம்: சசி
பிஆர்ஓ : நிகில் முருகன்.
‘பெண்களை தெய்வமாக வழிபடுவதற்கு முன், அவர்களை மனிதர்களாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்யும் உணர்வுப்பூர்வமான படம்தான் – ‘நூறு சாமி’.
இளம் வயதிலேயே கணவனை இழக்கும் செல்வி என்கிற சுவாசிகா, தனது இரண்டு மகன்களையே உலகமாகக் கொண்டு வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். 26 வயதில் கணவனை இழந்தவர். விதவை என்ற துயரத்திலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது. தனது மகன்கன் இருவரையும் நன்றாக படிக்க வைத்து வளர்த்து அவர்களது வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியில் இருக்கிறார் சுவாசிகா. வளர்ந்து ஆளான பிள்ளைகள் இருவரும் தனிமையில் வாடும் தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்கு தாய் சுவாசிகா மறுக்கிறார். அவரை வற்புறுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர். தனது தாய்க்காக மனைவி இழந்த விஜய் ஆண்டனியை மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார்கள். சுவாசிகாவும் தன் மகன்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு விஜய் ஆண்டனியை மறுமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார். ஆனால்,உறவினர்களும்
ஒரு பெண்ணின் வலியையும், தாயின் அன்பையும், சமூகத்தால் தொடர்ந்து விசாரிக்கப்படும் மனிதரின் மனநிலையையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் சுவா
இப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி,ஆனால் அவர் வருகையே மிகவும் தாமதமாகத்தான் இருக்கிறது.ஆனால் அது ஒரு குறையாகத் தெரியாத வண்ணம்,நடிப்பால் சமன் செய்திருக்கிறார். அதேபோல் அஜய் தீஷன் மற்றும் சக்தி ஆகியோர் மகன்களாக கதையின் உணர்வை தாங்கிச் செல்கின்றனர். மற்றும் பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என துணைப் பாத்திரங்களில் வரும் அனைவரும் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பாலாஜி ஸ்ரீராம் இசையில் பின்னணி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கும், பாத்திரங்களுக்கும் செழுமை சேர்த்துள்ளன.
தமிழ் சினிமாவில் தாயை தெய்வமாக உயர்த்திப் பேசும் படங்கள் ஏராளம். ஆனால், ‘நூறு சாமி’ தாயை ஒரு மனிதராகப் பார்க்க வேண்டும் என்ற புதிய கோணத்தை முன் வைத்து ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சசி. மறுமணம் என்பது வெறும் பாலியல் தேவைக்கானது அல்ல என்பதையும் அப்படிப் பார்க்கும் பார்வை தவறானது என்பதையும் சுட்டிக் காட்டி, எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் ஏற்றுக் கொள்ளும் விதமாக கதை அமைத்திருப்பது சசிக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் ‘நூறு சாமி’ ஒரு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தும் படம்.
ரேட்டிங் 4 / 5.