டார்க் ஜெயன்ட் – திரைப்பட விமர்சனம்

19

 

 

சென்னையில் வசிக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தன் மனைவி ஜோவிட்டா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு ஏற்படும் தொழில் நஷ்டத்தால் பலரிடம் கடன் வாங்கி அதை திரும்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்.
இச் சுழலில் தன் நண்பரான அமுதவாணனிடம் சில நாட்களில் தருவதாக கூறி ரூபாய் இரண்டு லட்சத்தை கடனாக வாங்குகிறார் .
பல பேரிடம் பணம் வாங்கியதால் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஆதர்ஷ் மதிகாந்தை கோவை மாவட்ட கிராமத்தில் இருக்கும் அப்பா வழித் தாத்தா உடல்நிலை முடியாமல் இருப்பதாகவும் சொத்துக்கள் அனைத்தையும் பேரனான உங்களுக்கு எழுதி வைக்க ஆசைப்படுவதாக கூறி அந்த வீட்டில் வேலை செய்யும் செந்தில் என்பவர் தொலைப்பேசியில் அவரிடம் கூறுகிறார்.
இதனையடுத்து சொத்து கிடைத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தன் மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு ஆதர்ஷ் மதிகாந்த் கிராமத்தில் இருக்கும் அந்த வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு சென்றதும் நாயகி ஜோவிட்டா கர்ப்பம் அடைகிறார். சொத்துக்காக பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தா உடன் சில நாட்கள் தங்க முடிவு செய்கிறார்.
சில நாட்கள் அந்த வீட்டில் ஆதர்ஷ் மதிகாந்த், மனைவி ஜோவிட்டா மற்றும் தங்கையுடன் தங்கும்போது திகிலான பல அமானுஷ்ய சம்பவங்கள் அந்த இடத்தில் நடக்கிறது.
இந்நிலையில் கொடுத்த பணத்தை வாங்குவதற்காக ஆதர்ஷ் மதிகாந்தை தேடி கிராமத்திற்கு வரும் அமுதவாணன் காணாமல் போகிறார். காவல் நிலையத்தில் அவரது மனைவியின் புகாரின் அளித்ததன் பேரில் போலீஸ் அவரை தேடுகிறது .
ஒரு கட்டத்தில் ஆதர்ஷ் மதிகாந்தை கிராமத்திற்கு வரவழைத்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த அவரது தாத்தாவும், பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர் என்கிற உண்மையும் அதே நேரத்தில் தன் தாத்தாவும் , தந்தையான அருவி மதனும் சாத்தானை வழிபட்டு நரபலி கொடுத்தவர்கள் எனவும் அ தன் தாயான சோனியா அகர்வாலினால் அருவி மதன்கொல்லப்பட்டவர் என்பதும் ஆதர்ஷ் மதிகாந்திற்கு தெரிய வருகிறது.
முடிவில் அருவி மதனும் அவரது தந்தையும் ஏன் சாத்தானை வழிபட்டார்கள் ? அதன் பின்னணி என்ன ?
சாத்தான் தொல்லையிலிருந்து மீண்டு வந்த ஆதர்ஷ் மதிகாந்திற்கு தாத்தாவின் சொத்துக்கள் கிடைத்ததா ?
இறுதியில் காணமல் போன அமுதவாணனை போலீசார் கண்டுபிடித்தார்களா ? என்பதை சொல்லும் படம்தான் ‘டார்க் ஜியண்ட்’.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்த் இயல்பான நடிப்பால் கர்ப்பிணியான தன் மனைவி மீது காட்டும் பாசம், தங்கை மீது கொண்ட அன்பு , அமானுஷ்ய சக்தி கொண்டவராக நடிக்கும் காட்சிகள் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் கதைகேற்றபடி அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
சோனியா அகர்வால் கணவராக நடித்திருக்கும் அருவி மதன் வழக்கமான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .
நாயகியாக வரும் ஜோவிட்டா சிறப்பான நடிப்பில் தன் பங்கை பூர்த்தி செய்கிறார் . ஆதர்ஷ் தங்கையாக வருபவர் அளவான நடிப்பால் கவர்கிறார். இன்ஸ்பெக்டராக வருபவர், லிவிங்ஸ்டன், குருசாமியாக வரும் கே.பாக்யராஜ் என படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை பாராட்டும்படி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபாலின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
சாத்தானை வழிபட்டு சட்ட விரோத செயல்கள் செய்யும் ஒரு குடும்பத்தின் கதையை மையமாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை சஸ்பென்ஸ் , ஹாரர், திரில்லர் கலந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில்அனைவரும் ரசிக்கும் திகிலான திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கே.எஸ். கிஷன்.

 

ரேட்டிங் 2.8 /5