‘காதல் ரீசெட் ரிப்பீட்’ -திரைப்பட விமர்சனம்!

45

 

படம்: காதல் ரீசெட் ரிப்பீட

நடிப்பு: மதும் கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர்

தயாரிப்பு: சன்னி, டென்வி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா

இயக்கம்: விஜய்

பி ஆர் ஓ : யுவராஜ்.

பெரிய பணக்காரரின் மகளான ஜியா சங்கர் பாடல் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டு இசைக்குழு ஒன்றில் பாடகியாக இருந்து சர்வதேச புகழ் அடைய எண்ணுகிறாள். அந்த இசை குழுவிலிருக்கும் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையில் ஜியா சங்கர் மீது பத்து வயது முதலே ஆசை வைத்திருக்கிறான் மதும் கேஷ். ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்வின் பாக்கியம் என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் மதும்கேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார். இந்த சூழலில் ஸ்காட்லாந்தில் நடக்கும் ஒரு இசை போட்டியில் கலந்துக் கொள்ளச் சென்ற ஜியா சங்கர்  தான் காதலித்த அர்ஜுன் அசோகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதைக் கண்டு மனம் வேதனையடைந்து தற்கொலை செய்ய முயலுகிறார். அப்போது  மதும் கேஷ்  அவரைக் காப்பாற்றி எம்.எஸ்.பாஸ்கர் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.  ஜியா சங்கருகு தலையில் அடிபட்டதால், அவருக்கு ஆன்டோகிரட் அம்னீசியா இருக்கிறது. ஆன்டோகிரட் அம்னீசியா (Anterograde amnesia) என்பது மூளையில் ஏற்படும் காயம் அல்லது பாதிப்பிற்குப் பிறகு, புதிய நினைவுகளை உருவாக்கவோ அல்லது தகவல்களைத் தக்கவைக்கவோ முடியாத ஒரு நரம்பியல் கோளாறு ஆகும்.. இதனால் ஜியா சங்கருக்கு நடந்தது எதுவும் ஞாபகம் இல்லாமல் போகிறது. காலையில் அனைத்தையும் புதிதாக கேட்க, இரவு தூங்கி எழுந்ததும் மீண்டும் அனைத்தையும் மறந்து விடுகிறார். இதனால் தான் யார் ? என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் அவரிடம், காதலனாக அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார் மதும்கேஷ். அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது,..என்பதை அழகான உணர்வுடன் சொல்லும் படம்தான் ‘காதல் ரீசெட் ரிப்பீட’

நாயகனாக மதும்கேஷ், முதல் படம் என்பதால் ஆங்காங்கே சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், இந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார். அதனை ரசிக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறார். அதேநேரம் மனதளவில் இருக்கும் இடைவெளி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தமான வேடம்.சிறப்பாக இல்லையெனினும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஜியா சங்கர், நல்ல புதுவரவு.அவருடைய அழகும் நடிப்பும் இந்தக்கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

இன்னொரு நாயகனான அர்ஜுன் அசோகனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்குத் ஏற்றவாறு நன்றாக நடித்திருக்கிறார்.

முக்கிய வேடமேற்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,தன் அனுபவ நடிப்பின் மூலம் படத்துக்குப் பலமாக இருக்கிறார். சின்னவேடமெனினும் நல்ல வேடமேற்றிருக்கும் விஜிசந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் நிறைவு செய்து இருக்கிறனர்.

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே நன்றாக ரசிக்கும்படியாக இருந்தது. 

 

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் காதல் நிரம்பி வழிகிறது. பின்புலக் காட்சிகளை அழகாகக் காட்டியதுடன் கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் உணர்வையும் மிக சிறப்பாக  காட்சிப் படுத்தியுள்ளார்.

 

இயக்குநர் விஜய் ஒரு மென்மையான காதல் காட்சிகளை, உணர்ச்சிபூர்வமான நடிப்பு, இனிமையான இசை ஆகியவற்றால் படம் பார்க்கும் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் பதியும் ஒரு அழகான காதல் அனுபவமாக அமைந்துவிட்டதால் அதை மிகச்சிறப்பாகச் செய்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளை திரைக்கதையின் முக்கியத்துவ காட்சிகளாக வைத்து படத்தை நகர்த்தியிருந்தாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார் 

 

மொத்தத்தில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.