‘ஹார்ட்டின்’ – திரைப்பட விமர்சனம்!

6

 

CHENNAI:

படம்: ஹார்ட்டின்

நடிப்பு: சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர்

தயாரிப்பு: டிரைடன்ட் ஆர்ட்ஸ்  ஆர் ரவீந்திரன்  மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ்

இசை: ராஜேஷ் முருகேசன்

ஒளிப்பதிவு: முகேஷ்

இயக்கம்:கிஷோர் குமார்

பிஆர்ஓ : நிகில் முருகன்.

ஜெய்ப்பூரில் செஃப் ஆக வேலை செய்யும் சிவா (சனந்த்), ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சாதனா (இமையா T)வை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, அழகான காதலாக மாறுகிறது. ஆனால் தனது முந்தைய காதல் இன்னும் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால், புதிய உறவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவா கூறுகிறார்.

சாதனாவின் உண்மையான அன்பு இறுதியில் சிவாவின் மனதை மாற்றுகிறது. காதல் மலர்ந்த நேரத்தில், எதிர்பாராத விபத்து ஒன்று அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது. அந்த விபத்தால் சிவா, தனது கடந்தகால காதலான சாஹித்யா (மடோனா செபஸ்டின்)வுடன் வாழ்ந்த நினைவுகளுக்கே திரும்பிச் செல்கிறார். தற்போது காதலிக்கும் சாதனாவை அவரால் அடையாளம் காண முடியவில்லை.

இதன் பிறகு என்ன நடக்கிறது? சிவாவின் வாழ்க்கையில் யார் நிலைத்திருக்கிறார்கள்? கடந்தகாலமா… நிகழ்காலமா… என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இதில்  சிவாவாக வரும் நாயகன் சனந்த் சுமாரான தோற்றத்தில் வந்தாலும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.இரண்டு கதாநாயகிகளுடன் அவர் நடித்துள்ளார்.முதல் காதலி மடோனா செபாஸ்டியனுடன் காதலிக்க அவர் பிரிந்து சென்ற வலியுடன் இருக்க ,இரண்டாவது காதலி இமயாவுடன் மறு மகிழ்ச்சி காணும் காட்சிகளில் நடிப்பில் நன்றாக வெளிப்பட்டுள்ளார்.

அறிமுக நாயகி இமயாவுக்கு முதல்படத்திலேயே கனமான வேடம் அமைந்திருக்கிறது.அனுபவ நடிகைபோல் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

மடானோ செபஸ்டியனுக்கு எதார்தத்துக்கும் உணர்வுப்பூர்வத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் வேடம்.நன்றாக நடித்து நல் வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார்.அங்கங்கே சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதாவும்  தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

ராஜேஷ் முருகேசனின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் உணர்ச்சி காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

முகேஸ்வரனின் ஒளிப்பதிவு ஜெய்ப்பூரின் அழகை திரையில் ரசிக்க வைக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர்குமார். இளைஞர்களை ஈர்க்கக்கூடிய கதையை எடுத்துக்கொண்டு எல்லோரையும் ரசிக்கக்கூடிய வகையில்  காதல் காட்சிகளில் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல், இயல்பான தருணங்களை இயக்குநர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. சில திருப்பங்கள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் படத்தை இறுதிவரை பார்க்க வைக்கிறது.

ரேட்டிங் 3/5.