அன்பில் அவன் -திரை விமர்சனம்

29

 

காதலுக்கு தங்கள் குடும்பத்தாரிடமிருந்து எழும் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்ளும் அந்த இளம் ஜோடி,
பொருளாதார ரீதியாக முன்னேற சொந்தத் தொழில் செய்ய முனைகிறார்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் அதற்கான இடமும் அமைய, அங்குள்ள பங்களாவில் குடியேறி தங்கள் தொழிலை தொடர முற்பட…
அதற்கு நிறைய முட்டுக்கட்டைகள். உள்ளூர் எம்.எல்.ஏ.வே முதல் எதிரியாகிறார். எவ்வளவோ முயன்றும் தனக்கு கிடைக்காத அந்த பங்களா எங்கிருந்தோ வந்த இந்த காதல் தம்பதிக்கு கிடைத்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அன்பாக கேட்பது போல் கேட்டு பார்க்கிறார். அப்புறம் விரட்டி பார்க்கிறார். அதன் பிறகு லோக்கல் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து அந்த தம்பதிக்கு முடிந்தவரை இடையூறு கொடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் வீடு தாக்கப்படுகிறது. அடியாட்கள் மூலம் தம்பதிகள் குறி வைக்கப் படுகிறார்கள்.
எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை தம்பதிகள் உணரும்போது அவர்களும் போராட்டத்துக்கு தயாராகிறார்கள். இந்த ஜீவ மரண போராட்டத்தில் அவர்கள் தப்பினார்களா? அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு வெறியாட்டம் போடும் எம்எல்ஏ கோஷ்டி என்னவானது என்பதை மின்னலும் இடியுமாக சொல்கிற திரைக்கதை, தொடக்கம் முதலே இந்த அன்பில் அவனை நெஞ்சுக்குள் நெருக்கமாக்கி விடுகிறது.

துணிச்சல் மிக்க இளைஞராக அசோக் செல்வன், அவரது காதல் மனைவியாக பிரீத்தி முகுந்தன் . இருவருமே நடிப்பில் அடித்து ஆடி இருக்கிறார்கள். மலைப்பிரதேசத்தில் விரும்பி வாங்கிய பங்களாவுக்கு
எம்.எல் ஏ. ஆட்களால் நேரும் ஒவ்வொரு பிரச்சனையையும்
தம்பதிகள் எதிர்கொள்ளும் விதம், கதைக்
களத்தை மேலும் அழகுபடுத்தி விடுகிறது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி முழு நீள ஆக்சன் திரைப்பட ஹீரோவாக அசோக் செல்வனை அடையாளம் காட்டி இருக்கிறது. இவருக்கும்
பிரீத்தி முகுந்த
னுக்குமான ஆழமான காதலே அவர்களுக்குள் மோதலை விளை விக்கும் இடங்கள் அத்தனையும்
ரசபாச சீன்கள்.
கணவருக்கும் தனக்குமான
கோப இடைவெளியை உணர்ந்து விட்டுக் கொடுக்கும் இடத்தில் சிறந்த நடிகை அடையாளம் தெரிகிறது, பிரீத்தி முகுந்தனிடம்.
வில்ல முகம் காட்டும் அந்த எம்எல்ஏ கேரக்டரில் கதிர் பாபு பிரகாசிக்கிறார்.
எம்எல்ஏவின் அடியாள் ரேஞ்சில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வரும் மகா டெல்லி கணேஷ் பார்வையிலேயே
வில்லத்தனத்தை வெளிப்படுத்தி விடுகிறார். குறிப்பாக பிரீத்தி முகுந்தனை இவர் நெருங்க முயலும் அந்த நரித்தன நடிப்பு, பகீர் ரகம்.

எதிரணி வழக்கறிஞராக வந்து அவ்வப்போது நாயகனை மிரட்டிப் போகும் கேரக்டரில் சாபுமோன் அப்துல் சமத் , நடிப்பில் பயமுறுத்தும் இன்னொருவர்.

கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் அழகோ அழகு. எம்எல்ஏவின் அடியாட்கள் கும்பலாக வந்து வீட்டை அடித்து நொறுக்கும் அந்த கிளைமாக்சில் கேமராவின் பங்கு அதிகம்.
கோவிந்த்
வசந்தாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் சுக ராகம்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெயின் இந்த படத்தில் இன்னொரு நாயகனாகவே தெரிகிறார். அதிரடி சண்டை காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ்
களேபரம் நிஜமாகவே அதிரடிக்கிறது.
போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜாவின்
கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து
இயக்கியிருக்கிறார்,
ஆர். கார்த்திகேயன்.
சாமானியர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடினால் என்ன நடக்கும் என்பதை காட்சிகளாக்கி நெஞ்சுக்குள் பதை பதைப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

பிளஸ்: நிஜ ஜோடி தோற்றார்கள் என்னும் அளவுக்கு காதல் தம்பதிகளாக வாழ்ந்து காட்டிய நாயகன்-நாயகி.

பிளாஷ்: மலைப்பிரதேச குளிர்ச்சியிலும் அனல் மூட்டும் திரைக்கதை.

ரேட்டிங்: 3.5

 

நடிகர்கள்

அசோக் செல்வன் – சூர்யா
பிரீத்தி முகுந்தன் – இயல்
கதிர் பாலு – எம்.எல்.ஏ. ராஜநாயகம்
மஹா டெல்லி கணேஷ் – இன்ஸ்பெக்டர் தவசி
சாபுமோன் அப்துசமத் – வழக்கறிஞர் மார்ட்டின்
ரேவதி – ராணி பத்மினி

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் : ஆர். கார்த்திகேயன்
தயாரிப்பு : கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம்
தயாரிப்பு நிறுவனம் : ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன்
படத்தொகுப்பு : செல்வா ஆர்.கே.
சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன்
கதை : விக்னேஷ் ராஜா
திரைக்கதை : விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன்
கலை இயக்கம் : மணிகண்டன் ஸ்ரீனிவாசன்
ஆடை வடிவமைப்பு : பினிடா ராமநாதன்
ஒலி வடிவமைப்பு : விஜய் ரத்தினம்
நடன அமைப்பு : லீலாவதி குமார், அனுஷா விஸ்வநாதன்
ஒப்பனை : செல்வம் மணி
ஸ்டில்ஸ்: கார்த்திக் சேகர்
VFX : UNIVERSAL LAB, RENDERHOOD, WEDUO, KIN
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : நோவா ஆபிரகாம் பிரபு
நிர்வாகத் தயாரிப்பாளர் : எஸ். சேதுராமலிங்கம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Cast

Ashok Selvan – Surya
Preity Mukhundhan – Iyal
Kadirbalu – Mla Rajanayagam
Maha Delhiganesh – Inspector Thavasi
Sabumon Abdusamad – Lawyer Martin
Revathi – Raani Padmini

Crew

Directed By : R Kaarthikeyan
Produced By :  K.Karunamoorthy, Ashok Selvan, Abinaya Selvam
Banner:  Ayngaran International & Happy High Pictures
Music : Govind Vasantha
Dop : Gowtham Rajendran
Editor : Selva Rk
Action: Peter Hein
Story By : Vignesh Raja
Screenplay : Vignesh Raja, R Kaarthikeyan, Ashok Selvan
Art Director : Manikandan Srinivasan
Costume Designer : Binita Ramanathan
Sound Design: Vijay Rathinam Mpse
Choreographers : Leelavathi Kumar, Anusha Vishwanathan
Makeup : Selvam Mani
Stills : Karthik Sekar
Vfx : Universal Lab, Renderhood, Weduo, Kin
Creative Producer : Noah Abraham Prabu
Executive Producer : S.Sethuramalingam