ஜெயிலர்-2 -திரை விமர்சனம்

41

 

கடந்த 2023-ஆம் ஆண்டு ரஜினிகாந்த்-நெல்
சன் திலிப் குமார் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக, வெளியாகி இருக்கிறது
‘ஜெயிலர் 2’.
முதல் பாகத்தில் சிலை கடத்தல் புள்ளிகளுடன் தொடர்பு வைத்து இருந்த தனது மகனை, மகன் என்றும் பாராமல் துப்பாக்கி தோட்டா பரிசளித்து மேலுலகம் அனுப்பி வைக்கிறார் தந்தை டைகர் முத்துவேல் பாண்டியன்.(ரஜினி.)
இந்த கொலை சம்பவம் அவர் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. மகனை காணவில்லை என தாயும், எங்கே போனாரோ
என்ன ஆனாரோ என்று தவிக்கும் மனைவியும், அப்பா எப்ப வருவார் என்று தேடிக் கொண்டே இருக்கும் குட்டி மகனும் நெஞ்சில்
ஏக்கமும் கூடவே நம்பிக்கையுமாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க…
முன்னாள் ஜெயிலர்
டைகர் முத்துவேல் பாண்டியனோ மகனை கடத்தல் பாதையில் பயணிக்க வைத்த லோக்கல் தாதா வர்மனையும் போட்டுத் தள்ளுகிறார்.
விஷச் செடிகளை வேரோடு பிடுங்கிய மன நிறைவில் ஊரின் பிரதான சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக பணியில் சேர்ந்து தானுண்டு தன் பணி உண்டு என்று நாட்களை அமைதியாக கடத்த முயல்கிறார்.
இதோடு முதல் பாகத்தை நிறைவு செய்த இயக்குனர் நெல்சன், இப்போது இரண்டாம் பாகம் மூலம் இன்னொரு அதிரடி எபிசோடை கையில் எடுத்திருக்கிறார்.
இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே முத்துவேல் பாண்டியனுக்கு பிரச்சனை வருகிறது. நகராட்சி அதிகாரி பகவதி பெருமா ளுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதல், அவரை பழக்கடை நடத்தும் மூர்த்தி என்பவரிடம் டிரைவராக கொண்டு போய் சேர்க்கிறது.
இன்னொரு பக்கம், முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மனின் மரணத்துக்கு பழி வாங்க அவரது கூட்டாளி திலீப்பும் (சுராஜ்
வெஞ்ஜரமூடு), மாஃபியா கும்பல் தலைவர் போதி கல்பக்கும் (எஸ்.ஜே.சூர்யா) வெறியோடு அலைகின்றனர்.

வர்மனைக் கொன்றது யார் என்று பரவிப் படரும் அவர்களது தேடல் ஒரு கட்டத்தில் முத்துவேல் பாண்டியன் முன்பு கொண்டு வந்து அவர்களை நிறுத்துகிறது.
இதன் பிறகு என்ன நடக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. எதிரிகள் எத்தனை பேராக இருந்தாலும் தனக்கே உரிய சாதுர் யத்தில் முத்துவேல் பாண்டியன் அவர்களை எப்படி வேரறுக்கிறார் என்பது விறுவிறு கிளைமாக்ஸ்.
டைகர் முத்துவேல் பாண்டியனாக அதே ரஜினி. அதே அட்டகாசம்.
படத்தின் முதல் பாதி முழுக்க நெல்சனின் டிரேட் மார்க் நகைச்சுவையோடு யோகி பாபு, நமோ நாராயணன் அண்ட் கோ’வுடன் இணைந்து ரஜினி நடத்தும்
காமெடி தர்பார் பல இடங்களில் திரையரங்கை குலுங்க வைக்கிறது.
இன்னொரு பக்கம் சுராஜ் வெஞ்சரமூடு – ரஜினி இடையிலான ஆடு புலி ஆட்டமும் ரசனைக்குரியது.
“50 வருஷமா என்னை முடிக்க யார் யாரோ ட்ரை பண்ணாங்க.
ஆனா முடியல” எங்க ரஜினி பேசும் கிளைமாக்ஸ் வசனம், ரசிகர்களின் கரகோஷத்தில் பாதி தான் காதில் விழுகிறது.
வில்லன் சுராஜின் கோட்டைக்குள் நடக்கும் சண்டைக் காட்சிக்கு இனி படம் பார்க்கும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டாலும் கேட்பார்கள். அந்த அளவுக்கு
தெறிக்கிறது, திரை.
இரண்டாம் பாதியில் கதை கோவாவுக்கு நகரும்போது கதை ஆக்க்ஷனுக்குள் போய் விடுகிறது.
கோவாவில் குடும்பத்துடன் பதுங்கி இருக்கும் ரஜினியை தேடிவரும் எஸ்.ஜே.சூர்யா, ரஜினி குடும்பத்திடம் பெற்ற மகனை கொன்ற கொலையாளி என்று ரஜினியை போட்டுக் கொடுக்கும் இடம் எமோஷனல் ஏரியாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த காட்சி சரியாக கையாளப்படவில்லை
( ரஜினியை எஸ் ஜே சூர்யா ரத்தம் கொட்டும் அளவுக்கு
முரட்டுத்தனமாக தாக்குவாராம். அதை அவர் ரஜினியின் மனைவி ரம்யா கிருஷ்ணன் தேமே என்று
பார்த்துக் கொண்டிருப்பாராம்.
இந்த காட்சி அந்த மனைவி கேரக்டரை முழுக்கவே பலவீனம் ஆக்கி விடுகிறது.(யார்யா நீ… என் புருஷன் மேல கைய வைக்க.. இது எங்க குடும்ப விஷயம். நாங்க பாத்துக்குறோம்.. என்று ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை …
(ஊஹூம்.)
கணவருடன் அத்தனை வருட அன்யோன்ய வாழ்க்கை வாழ்ந்த மனைவி, யாரோ ஒருவன் கணவனை அடிக்க எப்படி சம்மதிப்பார்?

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு காமெடி கலந்த வில்லத்தனத்தில் அசத்துகிறார். இவருக்கு செஸ் விளையாட்டு பற்றி நமோ நாராயணன் கிளாஸ் எடுக்கும் இடம் சிரிப்பில் திரையரங்கம் குலுங்கும் இன்னொரு இடம்.
இடைவேளைக்கு பிறகு தலை காட்டினாலும், அந்த வில்லன் நடிப்பில் நிபுணத்துவம் தெரிகிறது,
எஸ்.ஜே. சூர்யாவிடம்.
நடிகை வித்யா பாலனுக்கு
சிகரெட்டை ஊதிக்கொண்டே வில்லத்தனம் செய்யும் கேரக்டர்.
இவரை ரஜினி ‘குட் மார்னிங் மெசேஜ் ஏன் அனுப்பல’ என்று கலாய்க்கும் இடத்தில், சற்றே முகத்தில் கோபம் கலந்த வெட்கம் மின்னலாய் எட்டிப் பார்க்க… இந்த காட்சியில் இவர்
நடிப்பு அத்தனை அழகு.
முதல் பாகத்தைப் போலவே கதைக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, ஏராளமான கேமியோக்கள். சிவராஜ்குமார், மோகன்லால், மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி ஷெராப்,
ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி என இந்த பட்டியல் நீளுகிறது. இவர்களில் காது கடிக்கு ஆளாகும் மிதுன் சக்கரவர்த்திக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ரித்விக், மிர்னா
இருவருக்கும் முதல் பாகத்தை விட இதில் அதிகம் நடிக்க வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்
கள்.
இசையமைத்த அனிருத் வழக்கம்போல் பாடல்களில் கோட்டை விட்டாலும், பின்னணி இசையில் ராஜாங்கம் நடத்துகிறார். பூர்ணா வரும் பாடலில் நடனம் ரசிக்க வைக்க,
நோரா ஃபதேஹி ஆடும் நடனப் பாடலோ படத்துக்கு வேகத்தடை.
விஜய் கார்த்திக்
கின் ஒளிப்பதிவு காட்சிகளோடு இணைந்து கண்களில் நிறைகிறது.
இயக்கிய நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் முதல் பாகம் பலவே இரண்டாம் பாகத்தையும் ரசிக்கும் விதத்தில் தந்துள்ளார்
குறைகளும் இல்லாமல் இல்லை. படத்தில் லாஜிக் என்பது துளியளவும் இல்லை. லாக்கப்பில் இருக்கும் ரஜினியை மீட்க காரில் வரும் கிருத்திக் ரோஷன், போலீஸ் ஸ்டேஷன் சுவரை உடைத்து மீட்டு போவதெல்லாம் எந்த விதத்தில் லாஜிக் சாரே! அந்த ரணகள நேரத்திலும் ஒரு போலீஸ்காரர் சல்யூட் அடித்து ரித்திக் ரோஷனை அனுப்பி வைப்பது அதிர்ச்சி தருகிறது. குற்றவாளிக்கு சல்யூட் அடிக்க வைத்து போலீஸ்காரரை வாட்ச்மேன் ஆக்க நெல்சன் போன்றோரால் தான் தான் முடியும் போலிருக்கிறது!

ரஜினி தன் பங்குக்கு 500 பேர், எஸ்.ஜே.சூர்யா தன் பங்குக்கு 500 பேர் என கொன்று குவிக்கிறார்கள். ஆனால் போலீஸ் என்ற ஓர் இனம் இருப்பதற்கான அறிகுறியே படத்தில் இல்லை. எப்பவாச்சும் ஒப்புக்கு சப்பாணி
போல வந்து போகிறார்கள்.
வயது முதிர்வின் காரணமாக ரஜினி முந்தைய காலங்களைப் போல அதிரடியாக சண்டை போடவோ, நடனமாடவோ முடியாது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப காட்சிகளை அமைத்து இருப்பது தான் இதில் நெல்சனின் பலம்.

பிளஸ்: ரஜினி என்ற ஒற்றை மனிதரின் திரை ஆளுமை.

பிளாஷ்:
மூன்றாம் பாகத்துக்கான குறியீட்டுடன் படம் முடிவது.

ரேட்டிங்: 4/5